புதிதாக 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஜெ., உத்தரவு | புதிதாக 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஜெ., உத்தரவு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிதாக 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஜெ., உத்தரவு

Added : நவ 26, 2011
புதிதாக 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஜெ., உத்தரவு

சென்னை : மாநிலம் முழுவதும், 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தவும், 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏழு கோடியே, 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும். இவற்றில், தலா 30 படுக்கைகள் இருக்கும். மேலும், தலா இரண்டு மருத்துவ அதிகாரிகள், ஒரு இளநிலை உதவியாளர், ஓட்டுனர், மருந்தாளுனர், சுகாதார செவிலியர், ஆய்வுக்கூட நிபுணர், துப்புரவாளர் மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர் என, ஒன்பது பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
மொத்தம், 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டவையாக, 22 கோடியே, 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். மேலும், தலா மூன்று மருத்துவ அதிகாரிகள், ஒரு செவிலியர், ரேடியோகிராபர், ஓட்டுனர், துப்புரவு பணியாளர், சுகாதார நிலைய பணியாளர் என, ஒன்பது கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிலையங்கள் அமையும் இடங்கள்:
மாவட்டம் இடம்
திருச்சி சமயபுரம்
வேலூர் கொனவட்டம், சுமைதாங்கி
கிருஷ்ணகிரி பேஜிபள்ளி
கள்ளக்குறிச்சி சேந்தநாடு
சின்னசேலம் அம்மாகளத்தூர்
நாகை மதிரவேலூர்
திருப்பூர் புளியம்பட்டி
பெரம்பலூர் எளம்பலூர்
ஈரோடு காஞ்சிக்கோவில், மளையம்பாளையம்
திருப்பத்தூர் கோரட்டி
சங்கரன்கோவில் தென்மலை
திருவள்ளூர் கல்யாணகுப்பம்
பழநி கனப்பாடி
புதுக்கோட்டை ராப்பூசல்
கரூர் வடக்குபாளையம், தம்பிவாடி
தஞ்சாவூர் உக்கநாடு கேளையூர்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம்


தரம் உயர்த்தப்படும் நிலையங்கள் அமைந்துள்ள இடம்:
மாவட்டம் இடம்
அறந்தாங்கி மலையூர்
செய்யார் அக்கூர்
கோவை நல்லாட்டிபாளையம்
ஈரோடு டி.என்.பாளையம்
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம்
பழநி குஜிலியாம்பாறை
பூந்தமல்லி பூந்தமல்லி
சைதாப்பேட்டை பவன்ஜூர்
சேலம் கொங்கனாபுரம், பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், ஆரியபாளையம்
சிவகங்கை பூவந்தி
சிவகாசி கல்லமனைக்கான்பட்டி
தஞ்சாவூர் சிறுவாவிதூதி, அழகியநாயகிபுரம்
திருவள்ளூர் நர்வாரிகுப்பம், போரூர்
திருப்பத்தூர் குனிச்சி, திருவலம்
திருப்பூர் குடிமங்கலம்
திருவண்ணாமலை காரப்பட்டி
உதகை நெல்லக்கோட்டை
விழுப்புரம் மேல்சிதாமூர்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X