பொது செய்தி

தமிழ்நாடு

போடி நகராட்சி பகுதியில் பயன்பாட்டிற்கு வராத பாதாள சாக்கடை திட்டம்

Added : டிச 01, 2011
Share
Advertisement
போடி : போடி நகராட்சி பகுதியில் 28.28 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. போடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி பொதுநிதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக இடம் வாங்கப்பட்டு, திட்ட ஆய்வு பணிக்காக 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்தை

போடி : போடி நகராட்சி பகுதியில் 28.28 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. போடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி பொதுநிதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக இடம் வாங்கப்பட்டு, திட்ட ஆய்வு பணிக்காக 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு 80 சதவீதமும், தமிழக அரசு 10 சதவீதமும், நகராட்சி பொது நிதியிலிருந்து 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.


பாதாள சாக்கடை திட்டம் 28.28 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களும் பயன்படும் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜமீன்தாரணி காமுலம்மாள் மேல்நிலைப்பள்ளி பின்புற பகுதியிலிருந்து துவங்கி பெரியாண்டவர் ஹைரோடு, திருமலாபுரம் வழியாக சாலைக்காளியம்மன் கோயில் அருகே உள்ள துணை உந்து நிலையத்தில் கழிவுநீர் சேர்க்கவும், மற்றொரு பகுதியான சுப்புராஜ் நகரில் துவங்கி அசேன் உசேன்தெரு, நகராட்சி அலுவலக ரோடு வழியாக பிரதான உந்து நிலையத்திற்கு வரும் கழிவுநீர் அங்கு சுத்திகரிக்கப்படும். இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது. திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. புதிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X