பொது செய்தி

தமிழ்நாடு

புது ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய்

Added : டிச 01, 2011
Advertisement

சிவகங்கை : ஒரு லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கு,மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்கள் 1.84 கோடி குடும்பங்களுக்கு, மத்திய தொகுப்பில் இருந்து 1.33 லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மண்ணெண்ணெய் வரத்து இல்லாத நிலையில், புதிய ரேஷன் கார்டு பெறுவோருக்கு, மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படமாட்டாது என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து வழக்கத்தை விட அதிகமாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், புதிய ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்திற்கு பின் புதிய ரேஷன் கார்டுகளை பெற்ற குடும்பங்களுக்கு டிசம்பரில் 3 லிட்டர் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்க உத்தரவிட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X