பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப| பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப்ப முடிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப

Added : டிச 02, 2011 | கருத்துகள் (1)
Share
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.தொடக்கக் கல்வித் துறையில், பகுதி நேர பணியாக, 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள்

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.தொடக்கக் கல்வித் துறையில், பகுதி நேர பணியாக, 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 கைவினை மற்றும் தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் உள்ள, 16,549 பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தேர்வுப் பணிகளை நிறைவேற்ற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, பகுதி நேர ஆசிரியர் நியமனப் பணிகளை முடிக்க, கால அட்டவணையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பணி நியமனம் குறித்த விளம்பரம், மாவட்டந்தோறும், 1ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை வெளியிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பெயர் பட்டியல் பெறப்படும்.
* தகுதியானவர்களிடம் இருந்து, 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட குழுவினரால், விண்ணப்பங்கள் பெறப்படும்.
* விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, 16 முதல் 18ம் தேதி வரை நடைபெறும். 19ம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள், பணி நாடுனர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்படும்.
* நேர்முகத் தேர்வு மற்றும் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள், 26ம் தேதி துவங்கி, ஜன., 15ம் தேதி வரை, 21 நாட்கள் நடைபெறும்.
* ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்படும். ஜன., 27ம் தேதிக்குள், 16 ஆயிரத்து 549 பேரும் பணியில் சேர வேண்டும்.இது தொடர்பான இறுதி அறிக்கைகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்குனருக்கு, ஜன., 30ம் தேதிக்குள், அனைத்து அலுவலர்களும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X