பொது செய்தி

தமிழ்நாடு

தென் மண்டல நீச்சல் போட்டி: கேம்பியன் பள்ளி மாணவன் தகுதி

Added : டிச 02, 2011
Advertisement

திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் சென்னையில் நடந்த போட்டியில் பதக்கங்களை குவித்தனர்.
தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் நடந்தது. இதில் திருச்சி ஆல்பா பள்ளி மாணவர் ஹரீஸ் 50 மீ பட்டர்பிளை பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீ பிரீஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆல்பா பள்ளி மாணவி சகாரிகா 25 மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கமும், 25 மீ பிரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கமும், 25 மீ பட்டர்பிளை பிரிவில் வெள்ளிப்பதக்கமும், 25 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், 100 மீ மெட்லே பிரிவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.


கேம்பியன் பள்ளி மாணவர் நித்தியானந்த் 50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், 100 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், காமகோடி பள்ளி மாணவி மனீஷா 100 மீ பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்றனர். இம்மாதம் பெங்களூரில் நடக்கவுள்ள தென்மண்டல அளவிலான போட்டியில் கேம்பியன் பள்ளி மாணவர் நித்தியானந்த் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் ரிலே பிரிவில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X