பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியத்தில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் 652 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உள்ளாட்சி தேர்தல் காரணமாக கடந்த அக்., 2ம் தேதி நடக்க வேண்டிய கிராமசபை கூட்டம், நேற்று நடந்தது. பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் கிராமசபை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்றிய பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி ஊராட்சியில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் குறித்து, ஊராட்சி தலைவர் ரங்கநாதன் தெரிவித்தார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், ஆண்கள் இரண்டாயிரத்து 449 பேரும், பெண்கள் இரண்டாயிரத்து 575 பேரும் கலந்து கொண்டனர். கிராமசபையில் மொத்தம் 339 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. சின்னாம்பாளையத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பானுமதி தலைமை வகித்தார். கூட்டத்தில், விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது.தெற்கு ஒன்றியத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் இரண்டாயிரத்து 247 ஆண்களும், இரண்டாயிரத்து 381 பெண்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 313 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபைகளில் ஊராட்சி வரவு செலவு கணக்கு, பொது சுகாதாரம், ஊராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வடக்கு, தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் மொத்தம் 652 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளில், 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 353 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் திட்டத்தில் சமூக தணிக்கை, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், முழு சுகாதார திட்டம், ஜூலை 2011 முதல் செப்.,2011 வரை பொது செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 38 ஊராட்சிகளில், குருவப்ப நாயக்கனூர் ஊராட்சியில், போதிய கோரம் இல்லாததால், கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 37 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 353 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE