இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு: பிரதமர் உறுதி

Added : ஜூலை 10, 2010 | கருத்துகள் (56)
Share
Advertisement
இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு: பிரதமர் உறுதி

"சுயமரியாதை, சுய கவுரவம் மற்றும் பாதுகாப்புடன் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் நியாயமான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அமைந்த அரசியல் தீர்வு காண இந்தியா அத்தனை முயற்சியும் எடுக்கும்' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.


இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களான சம்பந்தம், சேனாதிராஜா, விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமத்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நிலைத்து நிற்க கூடியதுமான தீர்வு ஒன்றை அடைவதற்கு, இந்தியா முழுமையான பங்களிப்பை செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் வழங்கியதாக, சந்திப்புக்கு பிறகு சம்பந்தம் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது: வன்னியில் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கும், புனர்வாழ்விற்கும் 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்தமைக்கு, இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டோம். அடிப்படை வாழ்வாதாரத்திற்கும், உள்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்விற்கு பேருதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டோம். மேலும், புனர்வாழ்வு அளிக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயே அமர்த்தபட வேண்டிய அவசியத்தையும் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். வடக்கிலும், கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வளையங்கள் அகற்றப்பட்டு, மக்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பி சகஜவாழ்க்கையை மீட்டுத்தர வேண்டும். இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத வகையில் அமைந்த விகிதாச்சார மாற்றங்களை கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.


இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும், மக்கள் சுயமரியாதை, கவுரவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றோடு வாழ்வதற்கும் நியாயமான அரசியல், பொருளாதார, சமூக கலாசார அபிலாஷைகளை கண்டு அடைவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவதற்கான தனது தீர்மானத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார். இவ்வாறு சம்பந்தம் கூறினார். இந்த குழுவினர், அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர்.


                                                                                         - நமது டில்லி நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோவிந்தராஜ் - bangalore,இந்தியா
10-ஜூலை-201023:58:25 IST Report Abuse
கோவிந்தராஜ் ஐ . நா சபை , யானை தன் தலையில் மண்ணை வாரி கொட்டுவது போல் கொட்டிவிட்டு சென்றது, இன்னும் இந்த மன்மோகன் சிங்க்கு விழும் குட்டு அந்த கொடூர பிராணி ராஜபக்ஷயிடம் இருந்து........அதுவரை இந்த இந்திய மக்கள் ஈழத்தமிழ் மக்களை பற்றி கவலை பட மாட்டார்கள். அவமானம் பட்டு தான் திருந்துவார் இந்த மன்மோகன் சிங். மன்மோகன் நீங்க எவ்வளவு பெரிய பொருளாதார மேதையா இருக்கலாம் உங்கள் பேச்சை G20 நாட்டு பிரதமர்கள், அதிபர்கள், ஏன் உலகின் முதல் குடிமகன் ஒபாமா கூட கேட்கலாம், அனால் மனித நேய அத்து மீறல் நடை பெற்றபோது உங்கள் ஒரு குரலுக்காக எங்கள் ஈழத்தமிழ்த் தலைவன் காத்து இருந்த தருணம்........சொல்ல இயலவில்லை.....உங்களை, இந்த அயல்நாட்டுக்கரி சோனியாவை, கொடூர ராஜபக்ஷே சகோதரர்களை, சரத் பொன்சேகாவை மற்றும் பான் கி மூன்...உங்கள் யாவரையும் இந்த பூமி மன்னிக்காது.......(இயற்கை வெல்லும், ஈழதமிழன் அழிந்தான் வரலாறு சொல்லாது, ஈழத்தமிழனை காக்க மறந்த இந்த உலகம் பதில் சொல்லும் - இயற்கை வாயிலாக)
Rate this:
Cancel
kaarthik - chennai,இந்தியா
10-ஜூலை-201022:15:55 IST Report Abuse
kaarthik மர மண்டைகளுக்கு ஏன் புரிந்து கொள்ளமாட்டீன்கிரிங்க, இலங்கைத் தலைவர்களே பல முறை சொல்லிவிட்டார்கள் ."நாங்கள் இந்தியாவின் போரைத்தான் நடத்துகிறோம், இந்தியாவுக்காக்கவும்தன் போரிடுகிறோம்" என்று . தமிழனை கொன்றது இந்தியா, அதனிடமே வந்து உதவி கேட்கும் நிலைமை இருப்பது தமிழனின் இழிநிலை. என்று மாறும் இந்த இழி நிலை. கடவுள் தான் கருணை காட்ட வேண்டும். சுயநலத்தின் முன் பொது நலம் தோற்றுப்போயி நிற்கிறது.
Rate this:
Cancel
சுரேஷ் பாபு - UmmAlHassam,பஹ்ரைன்
10-ஜூலை-201021:51:04 IST Report Abuse
சுரேஷ் பாபு மன்மோகன் சிங் நேர்மையானவர் என்பது எல்லாம் பழைய கதை. இவர் இத்தாலி ராணியின் கைப்பாவை. இவரின் கடிவாளம் திரையின் மறைவுக்கு பின்னால் உள்ள சோனியாவின் கைகளில் உள்ளது. தமிழர்களின் கனவுகளை நீர்மூலமாக்கி விட சோனியா சிங்களர்களுக்கு துணை போனார். அதற்கு சிங் மௌன சாட்சியாய் நின்றார். எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி என்று ஒரு துரோக கூட்டம் சோனியாவின் பின்னால் நின்று ஈழத்தமிழனுக்கு பால் ஊற்ற முயற்சிக்கிறது. அது வெறும் இடைக்கால கனவாகவே இருக்கும். அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,இத்தாலி,நார்வே,சுவிட்ஸர்லாந்து,டென்மார்க்,ஜெர்மனி,கனடா என்று இன்னும் பல நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் முயற்சியில் உள்ளன. சமீபத்திய நற்செய்தியாய் ஜப்பான் நாடும் இலங்கையை எதிர்க்க தொடங்கியுள்ளது.., ஆனால் இவ்வளவுக்கு பிறகும் இந்தியா அசையவில்லை காரணம் குற்றத்திற்க்கு திட்டம் போட்டதே இந்தியா தானே.., உண்மைகள் வெளிவரும் வேளையில் உலக நாடுகள் உமிழும் எச்சிலில் இந்திய அரசு நாணி தலைகவிழும் என்பது மட்டும் நிச்சயம்...,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X