கர்நாடகா மாநிலம் பல கலைகளையும் மட்டுமல்ல சிறந்த பல கலைஞர்ளையும் கொண்டுள்ளது.அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர்தான் எஸ்.திப்பிசாமி.
விவரம் தெரிந்த நாள் முதல் கேமிரா மற்றும் லென்ஸ்களுடனான இவரது உறவு வலுவானது
இயற்கை சூழலில் பறவைகள் மற்றும் விலங்குகளை படம் எடுப்பதில் வல்லவரான இவர் இதற்காக வாழ்க்கையில் பல நாட்களை செலவழித்துள்ளார்
தான் எதிர்பார்த்த படம் கிடைப்பதற்காக காட்டிற்குள் தவமாய் தவமிருந்த அனுபவம் நிறையவே உண்டு,அப்படி தவமிருந்தாலும் எதிர்பார்த்தது நடக்காமல் வெறும் கையுடன் திரும்பிய சம்பவங்களும் உண்டு.
இப்படி இவர் எடுத்த பல படங்கள் பல விருதுகளை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது.சென்னையில் இவர்தான் எடுத்த படங்களிலேயே பொக்கிஷமாக கருதும் படங்களை வைத்து நடத்திய கண்காட்சி பலரது கருத்தையும்,கண்ணையும் கவர்ந்தது.
அந்த படங்களில் சில இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளது.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE