பீகாரில் பந்த் ; கட்சி மட்டுமே வளர முடியும் ; தினக்கூலி பாதிப்பை கட்சிகள் மறக்கலாமா ?

Updated : ஜூலை 10, 2010 | Added : ஜூலை 10, 2010 | கருத்துகள் (5)
Share
Advertisement
State-wide,Bihar,bandh,on fuel,price,hike,பீகாரில்,பந்த் ; கட்சி,மட்டுமே,வளர,முடியும்,தினக்கூலி,பாதிப்பை,கட்சிகள், மறக்கல

பாட்னா: பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து 5 நாட்களில் மீண்டும் ஒரு பந்த் நடத்திட பீகாரில் எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் காரணமாக முக்கிய ரயி்லகள் நிறுத்தப்பட்டன, தேசிய நெடுஞ‌சாலைகளில் செல்லும் தொலைதூர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.  பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. அரசு அலுவலகங்களில் வருகை குறைவாகவே இருந்தது.   ஆதரவு எந்த அளவுக்கு இருந்தது என்ற போதிலும், இதனால் ஏற்படும் நஷட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கடந்த கால வரலாற்றை பொறுத்தவரையில் நாட்டில் விலைவாசி என்பது ஏறிக்கொண்டிருக்கத்தான் செய்கிறதேயொழிய குறைந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக களத்தில் இறங்கும் அரசியல் கட்சிகளை என்னவென்று சொல்வது ?

 

இன்று ( சனிக்கிழமை ) பீகாரில் பந்த் நடத்த லாலூ கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளமும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியும் அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த மாநிலத்தை பொறுத்தவரையில் ஐக்கிய ஜனதாதள கட்சி ஆட்சி செய்கிறது. முதல்வராக இருக்கும் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சியில் விலைவாசியை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்கட்சிகள் குறை கூறுகின்றன.

 

பா.ஜ., வுடன் நண்பராக இருக்கும் இந்த ஐ.ஜனதாதளம் கடந்த வாரம் ( 5 ம் தேதி ) நடத்திய பந்தில் பங்கேற்றாலும்,  இன்றைய ( 10 ம் தேதி ) பந்த் தேவையற்றது என ஆளும் அரசு எதிர்கட்சிகளை குறை கூறியிருக்கிறது. இந்த பந்த் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது. பந்த் காரணமாக அருகில் உள்ள மேற்குவங்கம், உ .பி., ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மேலும் விலைவாசி உயரத்தான் வழி செய்யும்.

 

ரூ. 13 ஆயிரம் கோடி நஷ்டம் : தினக்கூலிகள் பணிக்கு செல்ல முடியாமல் அன்றைய வருமானம் போவதுடன் அவர்கள் வீட்டில் உலை பற்ற வைக்க முடியுமா ? குறிப்பாக அன்றாட காய்ச்சிகள் நிலையை அரசியல் கட்சிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த வார பந்தின்போது தமிழகத்தில் திருப்பூரில் மட்டும் ரூ. 3. 5 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பீகாரில் ரூ. 50 கோடி.

 

இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய ரூ. 13 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் பீகாரில் கூடுதலாக ஒரு நஷ்டத்தை ஏற்படுத்த இன்று நடக்கும் பந்த் தேவையா என்பதற்கு மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண் - Coimbatore,இந்தியா
10-ஜூலை-201022:01:04 IST Report Abuse
அருண் ஸ்லேவாக்கியால இருந்து கமெண்ட்ஸ் போட்டர நண்பரே அங்க பெட்ரோல் வில்லை என்ன ???????? இப்போ பெட்ரோல் சந்தையில் 75$,இப்பவே 55rs என்றால், 140$ என பெட்ரோல் வில்லை உயரும் பட்சதில் எல்லோரும் தட்டி தொக்கி விட்டு பெற்றோல்லுகாக பிச்சை தான் எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
மதுரைக்காரன் - madurai,இந்தியா
10-ஜூலை-201021:50:21 IST Report Abuse
மதுரைக்காரன் உங்களை எல்லாம் நம்பி மக்கள் ஓட்டு போட்டால் பிச்சை கூட எடுக்க முடியாது . மு .க .த களே....அதாவது முட்டாள் கட்சி தலைவர்களே ...................................
Rate this:
Cancel
leadens - nagercoil,இந்தியா
10-ஜூலை-201020:57:50 IST Report Abuse
leadens விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு செய்து மக்களை வாட்டி எடுக்கும் தி மு க காங்கிரஸ் நல்ல கட்சி. நல்ல தலைவர்கள். போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு. காங்கிரஸ் நாட்கள் counted.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X