தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பூமிக்கடியில் ஏராளமான கனிமங்கள்

Updated : ஜூலை 11, 2010 | Added : ஜூலை 10, 2010 | கருத்துகள் (6) | |
Advertisement
தர்மபுரி : ராக்கெட் மற்றும் விமானங்களின் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும் மாலிப்டினம் கனிமம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பூமிக்கு அடியில் இருப்பது குறித்து, இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு நடத்த, தமிழ்நாடு கனிம நிறுவனம்,
Minerals,dharmapuri, krishnagiri,தர்மபுரி, கிருஷ்ணகிரி,  பூமி, கனிமங்கள்

தர்மபுரி : ராக்கெட் மற்றும் விமானங்களின் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும் மாலிப்டினம் கனிமம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பூமிக்கு அடியில் இருப்பது குறித்து, இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவன தொழில் நுட்ப பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் பூமிக்கடியில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு நடத்த, தமிழ்நாடு கனிம நிறுவனம், மத்திய அரசை வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வுப் பணிகள் நடந்தன. கடந்த 1991 முதல் 2001ம் ஆண்டு வரையில் அரூர் தாலுகா எ.வேலம்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 25 கிராமங்களில், இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், கடின வெப்பத்தை தாங்கக் கூடியதும், ராக்கெட் மற்றும் விமானங்களில் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும் மாலிப்டினம் என்ற கனிமம், எ.வேலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சர்வே பணி, 2001ம் ஆண்டுக்கு பின் நடந்தது. இதில், அரசின் புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில் சர்வே நடந்தது.


பூமிக்கு அடியில் மாலிப்டினம் எத்தனை அடி தூரத்துக்கு இருக்கிறது என்பதை கண்டறிய, ஆழ்துளை குழாய் மூலம் துளையிட்டு, கனிமங்கள் உருளை வடிவில் சேகரிக்கப்படுகின்றன.சேகரிக்கப்படும் கனிமங்கள் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள, மத்திய அரசின் மண் வளம் மற்றும் புவியியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி, எத்தனை சதவீதம் கனிமம் படிந்துள்ளது என சோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவுகள் சென்னை மற்றும் டில்லியில் உள்ள இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.பூமிக்கடியில் பிற கனிமங்கள்: தர்மபுரி மாவட்டத்தில், "குவார்ட்ஸ்' பெருங்கனிமம் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது.


இக்கனிமம் பென்னாகரம் தாலுகா கெண்ரமணஹள்ளி, அரூர் தாலுகா வேலம்பட்டியிலும் உள்ளது.  "டோலிரைட்' என்ற கனிமும் (கருப்பு கிரானைட் கற்கள்) கிடைக்கிறது. பைராக்சின், பெல்ஸ்பார், மேக்னசைட் கனிமங்களும் கிடைக்கின்றன.  இவற்றை வெட்டி பாலிஷ் செய்யும் போது, கருப்பு வண்ணத்தில் பளபளப்பாக உள்ளது. இவை கருப்பு கிரானைட் என அழைக்கப்படுகின்றன.இந்த கனிமங்கள், தமிழ்நாடு கனிம நிறுவனம் மூலமும், தனியார் குத்தகை அடிப்படையிலும், மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.


சுரங்கம் அமைத்து கனிமம் எடுக்க திட்டம் : அரூர் பகுதியில் உள்ள மாலிப்டினத்தை ஆய்வுக்கு பின், சுரங்கம் அமைத்து பூமிக்கடியில் கனிமங்கள் சேகரிக்கப்படும். சுரங்க தொழில் மூலம் 5,000 முதல் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.பட்டா நிலங்களில் கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பட்டா நிலத்துக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கி நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யவும், நிலம் ஆர்ஜிதம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாலிப்டினம் தொழிற்சாலை துவங்கும் போது வேலை வாய்ப்பு அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகின்றன.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் - sansebastian,ஸ்பெயின்
11-ஜூலை-201014:21:19 IST Report Abuse
மோகன் சீக்கிரம் வெளிநாட்டுகரனுக்கு போன் பண்ணி சொல்லுங்க, அப்பதானே அவனுக வந்து கூறு போடுவானுக. அரசியல் வியாதிகள் அதை தான் செய்ய போறானுக.
Rate this:
Cancel
நல்லசாமி - Singapore,இந்தியா
11-ஜூலை-201013:38:54 IST Report Abuse
நல்லசாமி மிக்க மகிழ்சி , இந்த கனிமவளம் உண்டு என்றல் எதிர்காலத்தில் தமிழ் நாடில் ஒரு விமான கட்டுமான தொழில்சாலை நிறுவ அரசு ஈட்படு வேண்டும் , நம் நாடு உயர வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
balachandiran - coimbatore,இந்தியா
11-ஜூலை-201011:10:23 IST Report Abuse
balachandiran எனக்கு avatar திரைப்படம் ஞாபகம் வருது!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X