யாவர்க்கும் இனியனாய்., எல்லோருக்கும் நண்பனாய்...

Updated : டிச 23, 2011 | Added : டிச 17, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரபலங்களை புகைப்படக்காரர்கள் படம் எடுப்பது வழக்கம்தான், ஆனால் ஓரு புகைப்படக்காரரே பிரபலமாக இருப்பது அபூர்வம்தான். அந்த அபூர்வமான புகைப்படக்கலைஞர்தான் யோகா தமிழகத்தில் முதன் முதலாக புகைப்படத்துறையில் கலைமாமணி பட்டம் பெற்றவர். இவரது கேமிராவில் பதிவாகத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு சென்னை பிரபலங்களின் செல்லமான புகைப்படக்கலைஞர் இவர். பத்திரிகை துறை உள்ளிட்ட

பிரபலங்களை புகைப்படக்காரர்கள் படம் எடுப்பது வழக்கம்தான், ஆனால் ஓரு புகைப்படக்காரரே பிரபலமாக இருப்பது அபூர்வம்தான். அந்த அபூர்வமான புகைப்படக்கலைஞர்தான் யோகாதமிழகத்தில் முதன் முதலாக புகைப்படத்துறையில் கலைமாமணி பட்டம் பெற்றவர். இவரது கேமிராவில் பதிவாகத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு சென்னை பிரபலங்களின் செல்லமான புகைப்படக்கலைஞர் இவர். பத்திரிகை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படக்காரராக பயணித்துவரும் இவரது அனுபவங்கள் மிக அபூர்வமாவனவை


1978 ம் ஆண்டு சிக்மகளூரில் இந்திராகாந்தி போட்டியிட்ட போது ஒரு 120 ரோலிபிளக்ஸ் கேமிராவில் பிளாக் அண்ட் ஒயிட் பிலிமும், ஒரு 35 எம்எம் கேமிராவில் கலர் பிலிமும், இன்னொரு 35எம்எம் கேமிராவில் கலர் டிரான்பரன்சி பிலிமும் போட்டுக்கொண்டு மூன்று நாட்கள் அவரை படமெடுக்க அலைந்ததில், மனதிற்கு திருப்தியாக ஒரு படம் கூட அமையவில்லை. ஆனாலும் விடாமுயற்சியுடன் அவர் ஊரைவிட்டு கிளம்பும் வரை கூட இருந்ததில், போகும் போது ஒரே ஓரு முறை அனவைரையும் பார்த்து சிரித்தபடி கும்பிட்டார். சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அப்போது எடுத்த ஒரே படம் மூன்று நாள் கவலையையும் தீர்ப்பதாக அமைந்தது.


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளின் போது பெருந்தலைவரான காமராஜர் எங்கு இருந்தாலும் வீட்டிற்கு வந்து வாழ்த்திவிட்டு செல்வார். ஒரு பிறந்த நாளின் போது வழக்கமாக காலை 9 மணிக்கெல்லாம் வரக்கூடியவர் மதியம் 1 மணியாகியும் வரவில்லை. அனைவரும் அவரவர் வேலையை பார்க்கபோய்விட்டனர்; திடீரென மாலையில் கறுப்பு காரில் வந்திறங்கிய காமராஜர் மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அவரை கைத்தாங்கலாக காரில் இருந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்ற சிவாஜிகணேசன், சொல்லியிருந்த நானே வந்திருப்பேனே என்று சொல்ல, "நான்தான் வாழ்த்து சொல்லவரணும்'' என்று சொல்லிவிட்டு, " முடியலை கிளம்புறேன்' என்று சொல்லிவிட்டு சென்றவர்தான், மறுநாள் காலை மரணமடைந்தார் என்ற தகவல் வந்தது. முடியாத நிலையிலும் வந்து வாழ்த்திவிட்டு சென்ற பெருந்தலைவரின் பெருந்தன்மையை நினைத்து, நினைத்து அழாத உள்ளங்களே கிடையாது.


இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முகத்தில் மகாலட்சுமியின் களை தாண்டவமாடும். அவர் பெரும்பாலும் புகைப்படத்திற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். அப்படியே ஒப்புக் கொண்டாலும் மிகவும் கூச்சப்படுவார். அவரை படமெடுப்பது என்பது ஒரு இனிய அனுபவம்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆஸ்தான குடும்ப போட்டோகிராபரான இவர் எடுத்த படங்களை வைத்து தனி புத்தகமே போட்டுள்ளார். அந்த அளவிற்கு வித, விதமான இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் படங்கள் எடுத்துள்ளார்.


இதே போல இயக்குனர் பாலசந்தர் முதல் பாரதிராஜா வரையிலான நிறைய பிரபலங்களை இவர் படம் எடுத்துள்ளார். பயணம் செய்து படம் எடுக்கும் டிராவல் போட்டோகிராபி இவருக்கு மிகவும் பிடித்தமானதாகும். அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரை உலகநாடுகள் பலவற்றிக்கு பயணம் மேற்கொண்டுள்ள இவர் தனது அனுபவங்களை வைத்து புத்தகங்களும் போட்டுள்ளார். இதுவரை ஏழு புத்தகங்கள் எழுதியுள்ள இவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.


ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தரும் இவர் தனது கேமிராவை தெய்வமாக மதிப்பவர். குளிக்காமல் ஒருநாளும் புகைப்படக் கருவியை தொடாதவர். ஒரு சமயம் ரயிலில் வரும்போது படமெடுக்கவேண்டிய சந்தர்ப்பம் காரணமாக ரயில் கழிவறையிலேயே குளித்தவர். மதுவின் வாசனையைக்கூட நுகராதவர், நுகரவிரும்பாதவர். புகைப்படத்தின் மீது கொண்ட காதலால் அரசு வேலையை தூக்கிஎறிந்தவர்.


இவர் ஆறுமாத கருவில் இருக்கும்போதே, தன் தந்தையை கலவர கும்பலுக்கு பறிகொடுத்து, தந்தையின் முகம் பார்க்காமலே பிறந்தவர். நடந்த சம்பவம் தந்த சோகத்தினால் ‘உயிர்பொம்மையான’ தன் தாயின் பாசமும் முழுமையாக கிடைக்காமல் வளர்ந்தவர். இதன் காரணமாக அன்புக்காகவும், நட்புக்காகவும் எதையும் செய்யத் தயங்காதவர். தனக்கு புகைப்பட உலகில் வழிகாட்டிய ஜெனித் சங்கரை தனது குருநாதராக வணங்குபவர். வீடியோ மற்றும் புகைப்பட சங்க கவுரவ துணைத்தலைவராக இருந்தபடி பலருக்கு வழிகாட்டிக்கொண்டு இருப்பவர்.
தான் இந்த அளவிற்கு வளர்வதற்கு காரணமே தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர் ஏ.நடராஜன், பத்திரிகையாளர்கள் பால்யூ, பாவைசந்திரன் ஆகியோர்தான் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பவர். பொருளாதாரம் துரத்தியபோது தன்னை தாங்கி பிடித்த நண்பர்கள் தணிகைவேல், மாரிமுத்து, பழநி, கோவிந்தராஜ் ஆகியோரை இப்போதும் தேடிப்போய் பார்த்து வருபவர்.


ஒருவர் பத்து மடங்கு அன்பு செலுத்தினால் நூறு மடங்கு திருப்பிச் செலுத்தும் பண்பு கொண்ட இவருக்கு நண்பர்கள் வட்டாரமும் மிகப்பெரிது.


சென்னை பாண்டிபஜாரில் ஒரு மாடியில் சின்னதாய் உள்ள ஓரு புகைப்பட நிலையத்தினுள் உட்கார்ந்து கொண்டு சுறு,சுறுப்பாய் இப்போதும் பணியாற்றிக்கொண்டு இருக்கும் இவர் இதுவரை எடுத்த பல ஆயிரக்கணக்கான படங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவராசியமான கதை உண்டு. ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷமே.


இவரது படத்திற்கு கீழே உள்ள சிவப்பு பட்டையில் காணப்படும் "போட்டோ கேலரி' என்ற பகுதியை கிளிக் செய்தால் இவர் எடுத்த சில படங்களை பார்க்கலாம். இவருடன் பேசவேண்டும் என்றால் எண்: 9841116426 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.-எல்.முருகராஜ்.Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugaraj - chennai,இந்தியா
19-டிச-201113:46:56 IST Report Abuse
murugaraj பொக்கிஷம் பகுதியில் இடம்பெறும் புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்கள் போட்டோகாலரியில் இடம் பெறுவதற்கு பதிலாக கட்டுரையின் பக்கத்திலேயே ‘தம்நெயில்’ முறையில் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Rate this:
Cancel
murugaraj - chennai,இந்தியா
19-டிச-201113:29:11 IST Report Abuse
murugaraj புகைப்படக்கலைஞர் திரு.யோகா எடுத்த படங்கள் அனைத்தும் அருமை,முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் பயிற்சி செய்வது போன்ற படம் அபூர்வமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X