அடுத்து புதுமையான போராட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு

Updated : டிச 28, 2011 | Added : டிச 26, 2011 | கருத்துகள் (78)
Advertisement
சென்னை: ""முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.நேற்று கைதாகி விடுதலையான பின், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை, தமிழக மீனவர், கூடங்குளம் பிரச்னைகளில் ஒட்டு மொத்த தமிழக மக்களின்
தே.மு.தி.க., அடுத்தக்கட்ட போராட்டம் புதுமையாக இருக்கும் :  விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: ""முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.

நேற்று கைதாகி விடுதலையான பின், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை, தமிழக மீனவர், கூடங்குளம் பிரச்னைகளில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் வருகையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. போராடும் மக்களை சந்தித்து பேசாமல், "2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாக்களில் பங்கேற்க பிரதமர் வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே, திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டு போட்ட மக்களுக்கு அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என பிரதமரிடம் கருணாநிதி மனு கொடுத்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அவர் இப்பிரச்னையில் என்ன செய்தார்? அவரைப் போலவே ஜெயலலிதாவும் பிரதமரிடம் மனு கொடுத்துள்ளார்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுகின்றனர். ஊழல் என்றால் இருவரும் ஒன்றாகி விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக நான்கு முறை போராட்டம் நடத்திவிட்டோம். இப்பிரச்னைக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்.
நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என என்னிடம் கேட்கின்றனர். இதற்கு நடிகர் சங்கத் தலைவர் மற்றும் செயலர் தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizh Idhayam - Chennai,இந்தியா
27-டிச-201123:20:02 IST Report Abuse
Thamizh Idhayam சுவத்துல கால வச்சு எகிறி குதிக்கிற போராட்டம் பண்ணுங்க...கண்டிப்பா பிரச்னை தீர்ந்துடும்...
Rate this:
Cancel
achilles ruler - fin,பின்லாந்து
27-டிச-201121:32:51 IST Report Abuse
achilles ruler புதுமை நா? உங்க கட்சில எல்லாரும் வேட்டிய மடிச்சு கட்டி கேரளா குள்ள எண்டர் பண்ணி மக்கள் எல்லாரயும் ஓட வச்சிருங்க...
Rate this:
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
27-டிச-201116:56:22 IST Report Abuse
baalaa சபாஷ் கேப்டன் !! அப்படியே அரபிக்கடல் மூலமா பாகிஷ்தானுக்குள்ள நுழையறீங்க முதல்ல ! அங்கிருந்து நாலு தீவிரவாதிகளை டயலாக் பேசியே பணிய வைக்கிறீர்கள் !! அவர்களை அழைத்துக்கொண்டு அப்படியே ஹிந்துகுஷ் மலையை கயிறு போட்டு கடந்து ஆப்கானிஸ்தான் அடைகிறீர்கள் !! அங்கு இன்னும் இரண்டு தீவிரவாதிகளை ஸ்டூல் மேல் ஏறி டைவ் அடித்து பிடிக்கிறீர்கள் !! ராவோடு ராவா எல்லா தீவிரவாதிகளையும் பார்டர் கிராஸ் பண்ணவைத்து டெல்லி கொண்டு வரீங்க !! யாருமே நுழையமுடியாத மன்மோகன்சிங் வீட்டுக்குள் ரகசியமாய் நுழைந்து தூங்கிக்கொண்டிருக்கும் பிரதமர் முன்னாடி நிறுத்துறீங்க !! முச்சா போக பாத்ரூம் லைட் போடும் மன்மோகன் சும்மா மிரண்டுபோய் நிக்கிறார் !! அப்போ சொல்றீங்க டயலாக் "பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கும் இவனுகளும் அல்லது ஆப்கானிஸ்தானில் ஆடு மேய்க்கும் இவனுகளும் இல்லை நமது எதிரி. நம்ம நாட்டுக்குள்ளேயே திருவனந்தபுரத்தில் உட்கார்ந்து கொண்டு அணையை உடைப்போம், தண்ணீர் தரமாட்டோம், என்று தகராறு செய்பவன் தான் நம் முதல் எதிரி. வரட்டா ?? அஆங் ..." என்று பல்லை கடித்துக்கொண்டே பேசுங்க. பிரதமர் அப்படியே ஆடி போய்விடுவார், ஆடி. எப்போ செய்றீங்க கேப்டன் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X