பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது

Updated : டிச 26, 2011 | Added : டிச 26, 2011 | கருத்துகள் (12)
Share
Advertisement
தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தலா, 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய, இரு அணுஉலைகள் மூலம், மின்உற்பத்தி துவக்க இருந்த

தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தலா, 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய, இரு அணுஉலைகள் மூலம், மின்உற்பத்தி துவக்க இருந்த நிலையில், அணுமின் நிலையத்தால் ஆபத்து என, ஒருதரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், மின் உற்பத்தி துவக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. "இந்த அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. "சுனாமி' புயல் போன்ற இயற்கை சீற்றத்தால், எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே, பயம் வேண்டாம்' என, இதை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் உறுதிபடத் தெரிவித்தார். இக்கருத்தையே, விஞ்ஞானிகள் பலரும் கூறினர். இப்பிரச்னையில், மத்திய அரசு குழுவினர், போராட்டக் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள், அணுமின் நிலையத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

துண்டு பிரசுரங்கள் வினியோகம்: இந்நிலையில், "சுனாமி'யால் இந்த அணுமின் நிலையம், எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பன போன்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், வணிக வளாகங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆதரவு அமைப்பினர் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சுனாமி' என்பது, கடலுக்கடியில் அதிக சக்தியுடன் பூகம்பம் ஏற்படும்போது, கடல்மட்டம் உயர்ந்து, அலைகள், மிகுந்த சக்தியுடன் எல்லாத் திசைகளிலும் நகர்வதாகும். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி' பேரலைகளால் பாதிக்கப்படாது.
அதற்கேற்றவாறு, கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில், அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் எல்லா கட்டடங்களும், கடல் மட்டத்திலிருந்து, 25 அடி உயரத்திற்கு மேல் தான் கட்டப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய கடற்கரையைச் சுற்றி, 26 அடி உயரத்திற்கு, மிகப் பலம் வாய்ந்த, பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
"சுனாமி'யால் அணுமின் நிலையத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பே இல்லை. மேலும், உலகிலேயே முதன்மையான, அதிநவீன பாதுகாப்பு அம்சமான, "இயல்பு நிலை குளிர்விப்பான் அமைப்பு' (கச்ண்ண்டிதிஞு ஏஞுச்t கீஞுட்ணிதிச்டூ குதூண்tஞுட் கஏகீகு), அணுஉலையை குளிர்விக்க அமைக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்திறன், வெப்பநீர் சோதனை ஓட்டத்தின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது."சுனாமி'யின் தாக்கம் ஏற்பட்டாலும், பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லாததால், கதிரியக்க கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும்,கடல் மட்டத்திலிருந்து அணுமின் நிலைய பல்வேறு கட்டடங்கள் அமைந்துள்ள உயரங்களும், வரைபடத்தில் குறித்து காட்டப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velu M - central,சிங்கப்பூர்
28-டிச-201109:37:19 IST Report Abuse
Velu M கூடங்குளம் வேன்முன்ன அடுத்தவன் வாங்க ரெடியா இருக்கான்.
Rate this:
Cancel
vinothkumar - tirupur ,இந்தியா
27-டிச-201117:58:36 IST Report Abuse
vinothkumar கூடங்குளம் பாதுகாப்பாகதான் உள்ளது, சதி கரரர்கள் தான் இல்லை என்று கூறுகிறார்கள். காலம்தான் பதில் சொல்ல வேண்டும் எப்படி தெரியுமா தமிழ் நைட்ல (நாடு) இருக்கென்றுது. இது சதி கரரர்கள் எதிர்பார்ப்பு.
Rate this:
Cancel
anuyaraj - Chennai,இந்தியா
27-டிச-201115:26:54 IST Report Abuse
anuyaraj எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள், அணுமின் நிலையத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.: இது தனி மனிதன் கூறும் கருத்து போல உள்ளது .தினமலர் பத்திரிக்கையா அல்லது நாரதர் வேலை செய்கிறதா ? சந்தேகமாக உள்ளது .சிண்டு முடியும் வார்த்தைகளை வார்த்தைகளை உபயோகித்து வாசகர்களையும் மக்களையும் சூடேற்றி உசுப்பேற்றி , அணு உலைக்கு எதிராக போராடும் அப்பாவி மக்களின் மேல் கோபத்தை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கிறது . தினமலரின் நடுநிலையான தன்மை மீது சந்தேகம் ஏற்படுகிறது . தினமலர் ஆசிரியர் அவர்களே ,தொடர்ந்து அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை குறி வைத்து வார்த்தைகளை உபயோகம் செய்வது , நிருபரின் கருத்தா, அல்லது , தினமலரின் கருத்தா என்பதை இங்கு விளக்க வேண்டும் : இதை சொல்வதால் நான் அணு உலைக்கு எதிரானவன் என்ற எண்ணம் வேண்டாம் : உங்கள் செய்திகளை படிக்கும் போதே சிண்டு முடியும் வேலைகளை நன்றாக செய்கிறீர்கள் என்பது நன்றாக விளங்குகிறது : ஆசிரியர் பதில் நடுநிலையாக தேவை . உங்கள் அணு உலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிரான செய்திகளை படித்து விட்டு பதில் தாருங்கள்
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394