கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது| Phamplets substantiating Koodankulam N Plant's safety being issued to the pulic | Dinamalar

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது

Updated : டிச 26, 2011 | Added : டிச 26, 2011 | கருத்துகள் (12)
தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தலா, 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய, இரு அணுஉலைகள் மூலம், மின்உற்பத்தி துவக்க இருந்த

தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தலா, 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய, இரு அணுஉலைகள் மூலம், மின்உற்பத்தி துவக்க இருந்த நிலையில், அணுமின் நிலையத்தால் ஆபத்து என, ஒருதரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், மின் உற்பத்தி துவக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. "இந்த அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. "சுனாமி' புயல் போன்ற இயற்கை சீற்றத்தால், எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவே, பயம் வேண்டாம்' என, இதை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் உறுதிபடத் தெரிவித்தார். இக்கருத்தையே, விஞ்ஞானிகள் பலரும் கூறினர். இப்பிரச்னையில், மத்திய அரசு குழுவினர், போராட்டக் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள், அணுமின் நிலையத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

துண்டு பிரசுரங்கள் வினியோகம்: இந்நிலையில், "சுனாமி'யால் இந்த அணுமின் நிலையம், எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பன போன்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், வணிக வளாகங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆதரவு அமைப்பினர் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சுனாமி' என்பது, கடலுக்கடியில் அதிக சக்தியுடன் பூகம்பம் ஏற்படும்போது, கடல்மட்டம் உயர்ந்து, அலைகள், மிகுந்த சக்தியுடன் எல்லாத் திசைகளிலும் நகர்வதாகும். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி' பேரலைகளால் பாதிக்கப்படாது.
அதற்கேற்றவாறு, கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில், அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் எல்லா கட்டடங்களும், கடல் மட்டத்திலிருந்து, 25 அடி உயரத்திற்கு மேல் தான் கட்டப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய கடற்கரையைச் சுற்றி, 26 அடி உயரத்திற்கு, மிகப் பலம் வாய்ந்த, பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
"சுனாமி'யால் அணுமின் நிலையத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பே இல்லை. மேலும், உலகிலேயே முதன்மையான, அதிநவீன பாதுகாப்பு அம்சமான, "இயல்பு நிலை குளிர்விப்பான் அமைப்பு' (கச்ண்ண்டிதிஞு ஏஞுச்t கீஞுட்ணிதிச்டூ குதூண்tஞுட் கஏகீகு), அணுஉலையை குளிர்விக்க அமைக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்திறன், வெப்பநீர் சோதனை ஓட்டத்தின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது."சுனாமி'யின் தாக்கம் ஏற்பட்டாலும், பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லாததால், கதிரியக்க கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும்,கடல் மட்டத்திலிருந்து அணுமின் நிலைய பல்வேறு கட்டடங்கள் அமைந்துள்ள உயரங்களும், வரைபடத்தில் குறித்து காட்டப்பட்டுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X