பொது செய்தி

இந்தியா

தேசிய கீதத்திற்கு வயது நூறு

Added : டிச 27, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூறாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மன' என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதால், இதற்கு பதில் பன்கிம்
தேசிய கீதத்திற்கு வயது நூறு

புதுடில்லி: தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூறாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மன' என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதால், இதற்கு பதில் பன்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய "வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க, ஒரு தரப்பில் வற்புறுத்தப்பட்டது. ஆனால், இந்த பாடலில், "துர்கை' பெயர் வருவதால், அதை மற்ற மதத்தினர் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஜன கன மன பாடல், கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 24ம்தேதி, தேசிய கீதமாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. சுதந்திர தின விழா, குடியரசு தின விழா மற்றும் அரசு விழாக்களில், இந்த பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல், 52 வினாடியில் பாடப்பட வேண்டும், என்ற விதி உள்ளது. குறிப்பாக, இந்த பாடல் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை வரவர குறைந்து வந்தது. அதனால் திரையரங்குகளில் தேசிய கீத ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthy perumal - madurai,இந்தியா
28-டிச-201101:02:47 IST Report Abuse
Krishnamoorthy perumal " ஜன கன மன " தேசிய கீதத்திற்கு வயது நூறு ஆனாலும் ,இந்த தேசிய கீதம் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் குறிப்பாக கேரளா மற்றும் காஷ்மீரில் அரசு விழாவில் பாடப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் .இதனை மத்திய அரசு கண்டும் காணாமல் உள்ளது அதை விட வேதனைக்குரிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X