பொது செய்தி

தமிழ்நாடு

கேரம்; சென்னை வீரர்களுக்கு கோப்பை

Added : டிச 29, 2011
Share
Advertisement
திருப்பூர் : மாநில அளவிலான கேரம் இறுதி போட்டியில், சென்னையை சேர்ந்த கேரம் வீரர்கள் கோப்பையை கைப்பற்றினர். திருப்பூர் மாவட்ட கேரம் கழகம் மற்றும் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் மாநில அளவிலான சீனியர் கேரம் போட்டி, தெற்கு ரோட்டரியில் நடந்தது. திருப்பூர், சென்னை, ஈரோடு, திருச்சி, கோவை உட்பட 12 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் விளையாடினர். இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

திருப்பூர் : மாநில அளவிலான கேரம் இறுதி போட்டியில், சென்னையை சேர்ந்த கேரம் வீரர்கள் கோப்பையை கைப்பற்றினர். திருப்பூர் மாவட்ட கேரம் கழகம் மற்றும் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் மாநில அளவிலான சீனியர் கேரம் போட்டி, தெற்கு ரோட்டரியில் நடந்தது. திருப்பூர், சென்னை, ஈரோடு, திருச்சி, கோவை உட்பட 12 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் விளையாடினர். இறுதிப்போட்டி நேற்று நடந்தது. ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி போட்டியில், உலக சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த கி÷ஷார்குமாருடன் மோதினார்; ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில், உலக சாம்பியன் பட்டம் பெற்ற இளவழகியுடன் - சென்னையை சேர்ந்த பரிமளாதேவி மோதினார்; இளவழகி முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் கி÷ஷார்குமார் - பிரேம் குமார் ஜோடி, ராதாகிருஷ்ணன் - கரிகாலன் ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில், கி÷ஷார்குமார் - பிரேம்குமார் ஜோடி முதலிடம் பிடித்தது.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, மாவட்ட கேரம் கழக தலைவர் ஜெகநாத்சிங் தலைமையில் நடந்தது. மாநில கேரம் கழக செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். சென்னையை சேர்ந்த பங்காருபாபு வாழ்த்தினார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த, ராதாகிருஷ்ணன், கி÷ஷார்குமார், பிரேம்குமார், இளவழகி, இரண்டாமிடம் பிடித்த பரிமளாதேவி, கரிகாலன் ஆகியோருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. தெற்கு ரோட்டரி தலைவர் சண்முகம், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட கேரம் கழக செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X