கருணாநிதிக்கு கேரள முதல்வர் கடிதம்

Added : டிச 30, 2011 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருவனந்தபுரம்: "கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவரது உடைமைகளுக்கும், சபரிமலை தரிசனத்திற்கு வரும், தமிழக பக்தர்களும் பாதுகாப்பாக உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பல கடிதங்கள் அனுப்பினார். அதில், "கேரளாவில்

திருவனந்தபுரம்: "கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவரது உடைமைகளுக்கும், சபரிமலை தரிசனத்திற்கு வரும், தமிழக பக்தர்களும் பாதுகாப்பாக உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியுள்ளார்.


முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பல கடிதங்கள் அனுப்பினார். அதில், "கேரளாவில் தமிழர்களும், அவரது உடைமைகளும் தாக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தி, இரு மாநில மக்களிடையே நல்லுறவு வளர, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.


இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னையால், கேரளாவில் வசிக்கும் தமிழர்கள், அவர்களது உடைமைகள் மற்றும், சபரிமலை தரிசனத்திற்கு வரும், தமிழக பக்தர்கள் ஆகியோர் பாதுகாப்புடன் உள்ளனர். அங்கிங்கு நடந்த ஓரிரு சம்பவங்களில் கூட, கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு நீர் தொடர்ந்து கிடைக்குமா என்ற, தமிழக மக்களின் வருத்தத்தைப் போக்கி பிரச்னைகளை அகற்ற வேண்டும் என்பதே, கேரள அரசின் நிலைபாடு. அணை விஷயத்தில், கேரளாவில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தமிழருக்கோ, தமிழக அரசுக்கோ எதிராக ஒரு போதும் நடத்தப்படவில்லை. அதுபோன்ற நடவடிக்கையை, எப்போதும் கேரளா எடுக்காது. ஆனால், தமிழகத்தில் சில இடங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களால், அங்கு கல்வி பயிலும், கேரள மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற காலக்கட்டத்தில், உன்னத தலைவர் என்ற அடிப்படையில் தாங்கள், இப்பிரச்னையை தலையிட்டு அமைதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில், உம்மன் சாண்டி கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.கருணாநிதி - C.I.T காலனி ,இந்தியா
31-டிச-201111:39:26 IST Report Abuse
மு.கருணாநிதி உடன்பிறப்பே, கேரளாவில் தமிழர்கள் நலமுடன் வாழ்வதாக அம்மாநில முதல்வரே சொல்லி விட்டார்.. மேலும், நமது குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்கள் அங்கே சிறப்பாக செயல்படுகின்றன. இன் நேரத்தில் நாம் பகைமை பாராட்ட கூடாது. தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழும் என்னை உத்தம தலைவர் என்று சொல்லியதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நமது தமிழ் இனத்தை எப்படி மதிக்கிறார் என்று....மழை விட்டும் தூவானம் விடாதது போல, அங்கங்கே சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் பொறுமையாக செல்ல வேண்டும். இலங்கை தமிழர் விவகாரத்தில் நாம் எவ்வளவு பொறுமையாக இருந்தோம் என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் என்பது எனக்கு தெரியும்.. இன்னொரு மாநிலத்தின் இறைமையின் மேல் நாமும் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது என்பதை நீ அறிவாய் என்பது எனக்கு தெரியும்..அம்மையாரின் ஆட்சியின் கீழ் வாழும் தமிழர்களை விட, கேரளாவின் தமிழர்கள் நன்றாக வாழ்வதாக நம்புவோம்..அதுதானே வாழ்க்கை....
Rate this:
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
31-டிச-201110:50:02 IST Report Abuse
Divaharan நெய்யாறு சானலில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. கடலில் விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் முல்லை பெரியாறில் அவர்கள் செலவில் அணைகட்டி தண்ணீரை கீழிருந்து மேலாக அனுப்பி நமக்கு தண்ணீர் தருவார்களாம். இதை எல்லோரும் நம்ப வேண்டும்?
Rate this:
Cancel
A.Poongunran - BARCELONA,ஸ்பெயின்
31-டிச-201109:47:14 IST Report Abuse
A.Poongunran கேரளாவில் உள்ள இவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தான் செய்தி . வேதாளன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X