அகர்தலா: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்க தேச பிரதமர் ஷேக்ஹசீனா வரும் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். திரிபுரா மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா வரும் 12-ம் தேதி தலைநகர் அகர்தலாவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வஙக தேச பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்க தேச பிரதமர் வரும் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். மேலும் 12-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ராஜ்யசபா தலைவரும் , துணைஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரியும் கலந்து கொள்ள உள்ளார். விழாவில் ஷேக்ஹசீனாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக கூறப் படுகிறது. வங்க தேச பிரதமர் விழாவில் கலந்து கொள்ள உள்ளதையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர் மாணிக்சர்கார் தலைமை செயலாளர் சஞ்சய்பாண்டா, அரசு உயர்அதிகாரிகள் , பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. மேலும் வங்க தேச பிரதமர் ஒருவர் திரிபுரா மாநிலம் வருவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE