புதுடில்லி:ராணுவ விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக, சீனா செல்லவிருந்த இந்திய விமானப் படை அதி காரிக்கு, சீன தூதரகம் விசா கொடுக்க மறுத்துள்ளது.இந்தியா - சீனா ராணுவப் பரிமாற்றங்கள் குறித்து பேச்சு நடத்து வதற்காக, இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பேரைக் கொண்ட குழு, வரும் 10ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற் கொள்ள வுள்ளது. இதில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த கேப்டன் பான்ஜினும் இடம் பெற்றிருந்தார். இவர் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், இந்த குழுவில் இடம் பெற்றிருந்த அதிகாரிகளில், கேப்டன் பான்ஜினுக்கு மட்டும் விசா தர முடியாது என, சீனத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. சீனாவில் இந்திய தூதரக அதிகாரிக்கு ஏற்பட்ட கொடுமை குறித்த பிரச்னையால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற் பட்டுள்ள நிலையில், தற்போது விசா மறுக்கப்பட்ட சம்பவம், விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என, சீனா ஏற்கனவே தெரிவித்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கேப்டன் பான்ஜின், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந் தவர் என்பதற்காக, அவருக்கு விசா மறுக்கப்பட்டு இருக்கலாம் என,தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் பிரச் னையைத் தொடர்ந்து, சீனாவிற்கு இந்திய ராணுவ அதிகாரிகள் குழு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE