போட்டோ ஜர்னலிசத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய சுகுமார்

Updated : ஜன 19, 2012 | Added : ஜன 07, 2012 | கருத்துகள் (3)
Share
Advertisement

இப்போது டாக்டர் பட்டம் வாங்குவதற்காக பதிவு செய்யப்படும் பல தலைப்புகள் ஆய்வு செய்யப்படுபவருக்கும், அதனை கேள்வி கேட்டு விவாதிப்பவருக்கும் மட்டுமே விளங்கக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியில்லாமல் சமூக அக்கறையுடன், புதிய சிந்தனையின் திறவுகோலாக சில தலைப்புகள் அமைந்து விடுவதுண்டு.
அத்தகைய தலைப்புதான் போட்டோ ஜர்னலிசம்

போட்டோ ஜர்னலிசத்தை தமிழில் சொல்வதனால் புகைப்பட இதழியல் எனலாம். ஆனால் போட்டோ ஜர்னலிசம் என்று சொல்வதே எளிதில் புரிந்து கொள்ளும் படிவமாகி விட்டது. தகுதியான போட்டோக்களை தேடிபிடித்து எடுத்து, அதனை தரவாரியாக பிரித்து, மக்களுக்கு பயன்படும்வகையில் செய்தியுடன் பிரசுரித்து வழிகாண்பதே போட்டோ ஜர்னலிசத்தின் அடிப்படையாகும்.


மதுரை திருநகரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் "போட்டோ ஜர்னலிசம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அநேகமாக இந்த துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர், இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.

இத்தனைக்கும் இவர் பத்திரிகை துறையைச் சேராதவர். நீண்ட காலமாக மதுரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை பார்த்து வருபவர். ஆனால் புகைப்படத்தின் மீது கொண்ட பெரும் விருப்பம் காரணமாக எப்போதும் கேமிராவும், கையுமாகவே இருப்பார்.


நாட்டில் உள்ள பெரும்பாலான காடுகளுக்குள் இவரது கேமிரா ஊடுரூவியுள்ளது. விலங்குகளையும், பறவைகளையும் படமெடுப்பது என்றால் இவருக்கு மிகவும் விருப்பம். உணவு, உறக்கமெல்லாம் அப்புறம்தான். அதே போல திருவிழாக்கள் என்றாலும் இவரது கேமிராவிற்கு கொண்டாட்டம்தான். எடுத்த படங்களின் அடிப்படையில் குவிந்துள்ள விருதுகள் பல.


இவர் மதுரை காமராசர் பல்கலையில் டாக்டர் பட்டம் பெறுபவதற்காக இந்த தலைப்பை பதிவு செய்த போது அங்குள்ள பேராசிரியர்கள், " இது மிகவும் கடினமான ஆய்வு மட்டுமல்ல, கடினமான களத்தில் இறங்கி செய்ய வேண்டிய ஆய்வும் கூட, இப்போதும் கூட கெட்டுப்போகவில்லை வேறு ஏதாவது தலைப்பை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேராசிரியர்கள் சொன்னபோது , பிடிவாதமாக இந்த தலைப்புதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி ஆய்வு செய்தவர்.

இவர் இந்த ஆய்வை தொடங்கி பல்வேறு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களையும் சந்தித்து விவரம் சேகரித்துக் கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட பெரிய விபத்து காரணமாக, பல வருடங்களாக இவர் தனது செயல்பாட்டை நிறுத்தி வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


ஆண்டுகள் பல கடந்த பின்னும் விடாப்பிடியாக தான் விட்ட இடத்தில் இருந்து துவங்கி தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். விரைவில் தமிழக ஆளுநர் கையால் மதுரை காமராசர் பல்கலையில் டாக்டர் பட்டம் பெறவும் உள்ளார்.

பெரும்பாலான மக்கள் இப்போதும் பெரிதும் நம்புவது பத்திரிகையில் வரும் புகைப்படங்களைத்தான். ஆகவே அதில் கொஞ்சமும் செயற்கைதன்மை கலவாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது பத்திரிகையாளர்களின் கடமையாகும். பத்திரிகை புகைப்படங்கள் என்பது வரலாற்றில் அற்புதமான பதிவாகும். வேகமாக மாறிவரும் உலகில் முந்தைய வாழ்க்கையை, வரலாறை, சம்பவத்தை அதன் இயல்பு மாறாமல் சொல்வது பத்திரிகை புகைப்படங்கள்தான் என்பது இவரது வலுவான, வளமையான கருத்தாகும்.


இப்போது பழமையான விஷயங்களை படமெடுப்பதில் பெரிதும் ஆர்வமாக உள்ளார். தனது முத்திரையை அதில் பதிக்க வாழ்த்துக்கள்.

இவரது போன் எண்: 9443075995


-எல்.முருகராஜ்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabhu Chandrasekaran - doha,கத்தார்
07-மே-201217:08:50 IST Report Abuse
Prabhu Chandrasekaran அண்ணன் சுகுமார் மதுரை மாவட்ட பூப்பந்தாட்ட வீரராவார்.....
Rate this:
Cancel
செந்தில் - திருப்பூர்,இந்தியா
10-ஜன-201217:28:25 IST Report Abuse
செந்தில் Great job Dr.Sukumar. Happy Pongal.
Rate this:
Cancel
லக்ஷ்மண் - சென்னை,இந்தியா
08-ஜன-201223:01:11 IST Report Abuse
லக்ஷ்மண் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X