மூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு| மூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு | Dinamalar

மூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு

Added : ஜன 17, 2012 | |
மூணாறு: மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் பனிப்பொழிவு உள்ளது. மூணாறில் கடந்த நவம்பரில் குளிர் காலம் துவங்கியது. டிச., 27ல் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியசாக குறைந்தது. சிறிதளவில் பனி பொழிவு காணப்பட்டது. அதன்பின் வெப்பம் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. கடும்பனி: கடந்த இரண்டு நாட்களாக மூணாறை
மூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு

மூணாறு: மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் பனிப்பொழிவு உள்ளது.


மூணாறில் கடந்த நவம்பரில் குளிர் காலம் துவங்கியது. டிச., 27ல் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியசாக குறைந்தது. சிறிதளவில் பனி பொழிவு காணப்பட்டது. அதன்பின் வெப்பம் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.


கடும்பனி: கடந்த இரண்டு நாட்களாக மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் பனிப்பொழிவு உள்ளது. செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ்சாக பதிவானது. கடும் உறை பனியால் கடும்குளிர் நிலவியது. கடந்த ஆண்டுகளை விட குளிர் அதிகரித்துள்ளது.


பாதிப்பு: பகலில் வெயில் காணப்பட்ட போதிலும், குளிர் குறையவில்லை. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X