திருவனந்தபுரம்: கேரள கவர்னராக பதவி வகித்து வரும் எம்.ஓ.எச்.பாரூக் உடல் நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றுள்ளதால், அப்பொறுப்பை கர்நாடக கவர்னர் பரத்வாஜ் கூடுதலாக கவனிப்பார்.
கேரள மாநில கவர்னராக, புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.ஓ.எச். பாரூக் பதவி வகித்து வருகிறார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறையில் சென்று விட்டார். இதையடுத்து அவருக்குப் பதிலாக, கர்நாடக மாநில கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ் கேரள மாநில கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் நேற்று முன்தினம் கேரள மாநில கவர்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதற்காக நடந்த எளிய நிகழ்ச்சியில், ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் அவருக்கு பதவி பிரமாணம் செய்வித்தார். நிகழ்ச்சியில்,கவர்னரின் துணைவியார் பிரபுல் லதா, முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் கார்த்திகேயன், அமைச்சர்கள், தலைமை செயலர் பிரபாகரன், டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE