நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, குடும்பத்தினருடன் வெங்கடேச பெருமாளை தரிசிக்க வந்துள்ள, மேலும், ஒரு லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந் துள்ளனர். நேற்று காலையிலிருந்து தொடர்ந்து வரும் பக்தர் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளதால், திருமலையில் முடிகாணிக்கை செலுத்துமிடம், தங்கும் விடுதிகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வாங்கவும் திருமலையில் உள்ள மத்திய தகவல் மையம் அருகில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது . வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் வரிசை, கோவிலுக்கு வெளியிலும் அரை கி.மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக நீண்டுள்ளது. இலவச தரிசனத்திற்கு, 12 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு, 4 மணி நேரமும் வரிசையில் காத்திருக்க நேரிடலாம். தரிசனத்திற்கு பின் லட்டு பிரசாதம் வாங்கவும் நீண்ட கியூவில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே திருமலை கோவிலில் பரிவேட்டை உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE