காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை | காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை

Added : ஜன 20, 2012 | கருத்துகள் (1)
காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு "செக்ஸ்' டார்ச்சர் கொடுத்த, அதன் நிர்வாகிக்கு அடி, உதை விழுந்தது. அந்த காப்பகத்திற்கு "சீல்' வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜோசப், 57. இவர், 2003ம் ஆண்டு முதல் இங்கு, "லிட்டில் ஏஞ்சல்' என்ற பெயரில் சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார்.

ஏழைக் குடும்பம், சிறைக்கைதிகளின் பிள்ளைகள் இங்கு தங்கி, அருகிலுள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர். இதன்படி, 12 சிறுவர்களும், 23 சிறுமியரும் தங்கியிருந்தனர். நிர்வாகி ஸ்டீபன் ஜோசப், சிறுமிகளுக்கு அடிக்கடி "செக்ஸ்' டார்ச்சர் தருவாராம். ஆனால், சிறுமிகள் பயந்துகொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்த்துள்ளனர். இதனிடையே, தூத்துக்குடி எம்.ஜி.ஆர்., நகர் ராஜன், 35, மகள் சுபாவிடம்,12,(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்டீபன் ஜோசப், சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.

நிர்வாகிக்கு அடி,உதை: இது குறித்து போனில் அவர் தந்தையிடம் தெரிவிக்க, நேற்று முன்தினம் காப்பகத்திற்கு வந்த ராஜன், ஸ்டீபன் ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தலையில் கம்பியால் தாக்கினார். இதில், மண்டைஉடைந்து படுகாயமடைந்த ஸ்டீபன் ஜோசப்பிற்கு, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

சுபா, அவரது தம்பி அரையாண்டுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், அவர்களைக் கண்டித்தேன். அந்த ஆத்திரத்தில் அவர்களது தந்தை, தன்னை கொலைவெறியுடன் தாக்கியதாக, ஸ்டீபன் ஜோசப் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்தனர்.

காப்பகத்திற்கு சீல்: தர்மபுரிமாவட்டம் அரூரைச்சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுமியும், காப்பகத்தில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொடுமைப்படுத்தியதாக, ஸ்டீபன் ஜோசப் மீது, புகார் அளித்தார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஸ்டீபன் ஜோசப்பின் "குட்டு' வெளிப்பட்டதால் சிறுமியர் பலர், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சர் கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்களிடம், தூத்துக்குடி எஸ்.பி.,ராஜேந்திரன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகம் விசாரித்தனர். அந்த காப்பகத்திலிருந்த சிறுவர், சிறுமியர் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, அந்த காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காப்பக நிர்வாகி கைது : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜோசப்,57. இவர், இங்கு, "லிட்டில் ஏஞ்சல்' என்ற பெயரில், சிறுவர் காப்பகத்தை நடத்தி வருகிறார். இக்காப்பகத்தில், சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த தகராறில், இவர் தாக்கப்பட்டார். படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீபன் ஜோசப், சிறுமி கொடுத்த புகாரில், நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அங்கு, கைதிகளுக்கான சிகிச்சை வார்டிற்கு அவர் மாற்றப்பட்டார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X