சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச பொருட்கள் வழங்குவதில் தகராறு : குடந்தை அருகே பஞ்., து.தலைவர் கொலை

Added : ஜன 20, 2012
Advertisement

கும்பகோணம் : கும்பகோணம் அருகே இலவச மிக்சி, கிரைண்டர் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி துணைத் தலைவர், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே தேனாம்படுகையைச் சேர்ந்த முருகையன் மகன் சிங்காரவேல், 38. இவரது மனைவி மீனா. சிங்காரவேல் ஊராட்சி துணைத் தலைவராகவும், அ.தி.மு.க., பிரதிநிதியாகவும் பதவி வகித்து வந்தார். நேற்று தேனாம்படுகை ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தேனாம்படுகையைச் சேர்ந்த கொட்டியப்படுகை மக்களுக்கு இலவச பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேனாம்படுகையில் உள்ளவர்களுக்கு பின்னர் வழங்கப்படும் என, வருவாய்த் துறையினர் அறிவித்திருந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி தேனாம்படுகை ஊராட்சி அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொட்டியப்படுகை கிராம மக்கள், நிகழ்ச்சியை கொட்டியப்படுகையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் செய்தனர். அப்போது, அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் சிங்காரவேல், சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது, அங்கிருந்த தேனாம்படுகையைச் சேர்ந்த வீரையன் மகன் சசிக்குமார், 22, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிங்காரவேல் மீது பல்வேறு இடங்களில் குத்தியதில், சம்பவ இடத்திலேயே சிங்காரவேல் இறந்தார்.

சிங்காரவேலுவின் உடலை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிங்காரவேலுவை கத்தியால் குத்தி கொலை செய்த சசிக்குமார் தந்தை வீரையன், சிங்காரவேலுவின் வீட்டில்தான் வேலை செய்து வருகிறார். சிங்காரவேலுவை எதற்காக சசிக்குமார் குத்திக் கொலை செய்தார் என்பது குறித்து, பட்டீஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X