சபரிமலை நடை இன்று அடைப்பு : பிப்.,13ல் திறப்பு

Added : ஜன 20, 2012 | |
Advertisement
சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை இன்று காலை அடைக்கப்படுகிறது. பிப்.13-ம் தேதி மீண்டும் நடை திறக்கிறது. சபரிமலையில் மகரவிளக்கு விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலும், படிபூஜையும் நடைபெற்றது. மூன்று நாட்கள் சன்னிதானத்துக்கும், நான்காவது நாள் சரங்குத்திக்கும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளினார். 16-ம்
சபரிமலை நடை இன்று அடைப்பு : பிப்.,13ல் திறப்பு

சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை இன்று காலை அடைக்கப்படுகிறது. பிப்.13-ம் தேதி மீண்டும் நடை திறக்கிறது. சபரிமலையில் மகரவிளக்கு விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலும், படிபூஜையும் நடைபெற்றது. மூன்று நாட்கள் சன்னிதானத்துக்கும், நான்காவது நாள் சரங்குத்திக்கும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளினார். 16-ம் தேதி முதல் நேற்று வரை தினமும் இரவு எட்டு மணிக்கு படிபூஜை நடைபெற்றது.

காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுச்சேரி கானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும்மேடு, தலப்பாறைமலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை ஆகிய 18 மலைகளை குறிக்கும் வகையில் சபரிமலையில் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைகளின் தேவதைகளை திருப்தி படுத்தும் வகையில் படிபூஜை நடத்தப்படுகிறது. 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த பூஜையின் முன்பதிவு 2025-ம் ஆண்டு வரை முடிந்து விட்டது.

சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழாவுக்காக கடந்த 13-ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்பட்ட போது பந்தளம் மன்னர் பிரதிநிதி ஹரிராமவர்மா ராஜாவும் உடன் வந்தார். 15-ம் தேதி திருவாபரணம் பம்பை வந்த போது அவர் பம்பையில் தங்கினார். மகரவிளக்கு முடிந்த நிலையில் சன்னிதானம் வந்த அவரை தங்க வாள் கொடுத்து தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர் 18-ம் படிக்கு கீழே வந்ததும் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி அவரை வரவேற்றார். பின்னர் தங்கவாளுடன் 18-ம் படியேறிய மன்னர் பிரதிநிதி ஸ்ரீகோயில் முன்பு வந்து ஐயப்பனை வணங்கினார். ஐயப்பனை காட்டில் இருந்து எடுத்து வளர்த்த பந்தளம் மன்னர் ஐயப்பனை காண வருவதாக இந்த ஐதீகம் உணர்த்துகிறது.

இன்று காலை ஏழு மணிக்கு அவரது முன்னிலையில் நடை அடைக்கப்படும். மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடை அடைத்து சாவியை மன்னர் பிரதிநிதியிடம் கொடுக்க, வரும் நாட்களில் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி சாவியை ஒப்படைத்து விட்டு திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்பட்டு செல்வார். அடுத்து மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்.,13-ம் தேதி மாலை திறக்கும். 18-ம் தேதி இரவு வரை திறந்திருக்கும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X