பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய குடும்பங்கள் கணக்கெடுப்பு பட்டியல்

Added : ஜன 27, 2012
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்கள் கணக்கெடுப்பு குறித்த பட்டியல் அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இன்று (ஜன.,27) மற்றும் நாளையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயதொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

கணக்கெடுப்பு முடிந்த கிராமங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலில் ஈடுபடுவோர் கணக்கெடுப்பு பட்டியலில் தங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை சரிபார்த்து கணக்கெடுப்பு படிவத்தில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தால் தங்களது குடும்ப விவரங்களை கணக்கெடுப்பில் சேர்க்கவும், கணக்கெடுப்பில் தகுதியற்ற நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் தங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X