பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி

Added : ஜன 27, 2012
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வன விரிவாக்க அலுவலகத்தில் எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இயற்கை உரம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நான்கு கட்டங்களாக நடக்கிறது.வனவியல் விரிவாக்க அலுவலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வனவியல் விரிவாக்க மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் 200 பேருக்கு இயற்க்கை உரம் தயாரித்தல், உயர் தொழில் நுட்ப நாற்றங்கால்கள் உற்பத்தி போன்றவை குறித்து நான்கு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் விதை மற்றும் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வீரிய ரக மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், விதை சேகரம், நாற்றங்கால் உற்பத்தி, வீரிய ஒட்டு ரகங்கள் உற்பத்தி தாவரங்களை தாக்கும் நோய்கள் அதற்கான தீர்வு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றில் அனுபவம் வாய்ந்த வனத்துறை, வேளாண்மை துறை, பட்டுவளர்ச்சி துறை, பூச்சியியல் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை மற்றும் மண்பரிசோதனை துறை வல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.முதல் கட்ட பயிற்சி இன்று (ஜன., 27) துவங்கி 28, 29 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது கட்ட பயிற்சி வரும் ஃபிப்ரவரி 6 மற்றும் 7,8 ஆகிய தேதிகளிலும், மூன்றாம் கட்ட பயிற்சி ஃபிப்ரவரி 15 மற்றும் 16,17 ஆகிய தேதிகளிலும், நான்காம் கட்ட பயிற்சி ஃபிப்ரவரி 27 மற்றும் 28,29 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.பயிற்சியின் போது உணவு மற்றும் தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர்களை "வனவர் அல்லது வனச்சரக அலுவலர், வனவியில் விரிவாக்க சரகம், போலுப்பள்ளி கிராமம், பில்லனகுப்பம் அஞ்சல், கிருஷ்ணகிரி' என்று அலுவலகத்தில் நேரில் அல்லது 94454-68677,94426-90086,78454-37302 ஆகிய மொபைல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.தங்கள் பெயர் மற்றும் விபரங்களை ஒவ்வொரு கட்ட பயிற்சி துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X