பொது செய்தி

தமிழ்நாடு

ஜனவரியில் ரூ.84 கோடிக்கு சேலம் "டாஸ்மாக்' மது விற்பனை

Added : பிப் 02, 2012
Advertisement

ஜனவரியில் ரூ.84 கோடிக்கு சேலம் "டாஸ்மாக்' மது விற்பனை

சேலம் :சேலம், "டாஸ்மாக்' கடைகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 84 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் மது விற்பனை, 15 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகர பகுதியில், 90 கடைகளும், மாவட்டத்தின் புறநகர் பகுதியில், 171 கடைகள் என, 261 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி விற்பனை நிலவரம் மறுநாளும், மாத விற்பனை நிலவரம் அடுத்த மாதத்தின் முதல் நாளிலும் கணக்கிடப்படுவது வழக்கம்.
கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகை, மாரியம்மன் கோவில்களில் தை பண்டிகை ஆகியவற்றால் மது விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட்டது. சேலம், "டாஸ்மாக்' மாத சராசரி மது விற்பனை, 65 கோடியாக இருந்து வருகிறது. கடந்த 2011 ஜனவரியில் மது விற்பனை, 69 கோடியாக இருந்தது, நடப்பாண்டு ஜனவரியில், 15 கோடி ரூபாய் அதிகரித்து, 84 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X