திருப்பூர் : புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம், திருப்பூருக்கு நேற்று வந்தது.சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் மற்றும் "ஹீரோ மோட்டோ கார்ப்' நிறுவனம் ஆகியன இணைந்து, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை சென்னையில் கடந்த 4ம் தேதி துவக்கின. கல்லூரி என்.சி.சி., அலுவலர் சந்தோஷ் பாபு தலைமையில் என்.சி.சி., மாணவர்கள் 20 பேர் பங்கேற்றுள்ளனர். சென்னை மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார். திருப்பூர் வந்த அவர்களை, டி.எம்.எப்., மருத்துவமனை டாக்டர் கந்தசாமி தலைமையில், "சிட்டி மோட்டார்ஸ்' நிர்வாகிகள் சரவணகுமார் மற்றும் அசோக்குமார் வரவேற்றனர். ரயில்வே ஸ்டேஷன், குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்தனர். அதன்பின், பல்லடம், சூலூர் வழியாக கோவை நோக்கி சென்றனர். வரும் 19ம் தேதி, நிறைவடைகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE