சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் வேன் விழுந்து 10 பேர் பலி

Updated : பிப் 10, 2012 | Added : பிப் 09, 2012 | கருத்துகள் (1)
Advertisement

திருமங்கலம்: திருமணத்திற்கு பின் நடக்கும் தலைமுழுக்கு விருந்து நிகழ்ச்சி முடிந்து திரும்பிய திருமண கோஷ்டியினர் சென்ற வேன், மதுரை திருமங்கலம் அருகே, கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பத்து பேர் பலியாகினர். 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். தேனி மாவட்டம், தேவாரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் போஸ் மகன் சக்தீஸ்வரன். இவர், சென்னையில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த சித்திரைவேல் மகள் உமாவுக்கும், கடந்த பிப்., 6ம் தேதி, திருமணம் நடந்தது. மறு வீடு சென்று விட்டு, மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் தலைமுழுக்கு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மணமக்களுடன் உறவினர்கள், நேற்று முன்தினம் தேவாரம் வந்தனர். நிகழ்ச்சி முடிந்து, நேற்று உறவினர்கள், 13 பேர், மகிந்திரா டூரிஸ்டர் வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 8.30 மணிக்கு, மதுரை திருமங்கலம் நக்கலக்கோட்டை அருகில் வந்து கொண்டிருந்தபோது, வேகத்தடையை டிரைவர் கவனிக்காததால், நிலை தடுமாறிய வேன், சாலையோரம் இருந்த, 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதில், சித்திரைவேல், முருகம்மாள், பாலகிருஷ்ணன், சுகுணா, கைலாஷ், சஞ்சய், விஷ்வா உட்பட, 10 பேர் பலியாகினர். விருதுநகர் மாவட்டம், தி.மு.க., நகர செயலர் ராஜாக்கனி மகன் மாதவன், 28., தூத்துக்குடி மணி, கருப்பசாமி, 48, மூவரும் கவலைக்கிடமான நிலையில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


பலியானவர் அடையாளம் தெரிந்தது: விபத்தில் பலியானர்களின் தெரிந்தது. மணமகள் தந்தை சித்ரவேலு, 60, இவரது மனைவி முருகம்மாள், 59, மகன் பாலகிருஷ்ணன், 27, மகள் அருணா, 30, அவரது மகன்கள் கைலாஷ், 10, சஞ்சய், 8, விருதுநகர் மாதவன் மகன் விஷ்வா, 4, மணி மனைவி என தெரியவந்தது. வேன் கண்ணாடியை உடைத்து, அருணா கணவர் இறகுப்பந்து வீரர் கருப்பசாமி தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Courageouscse Cse - Karur,இந்தியா
10-பிப்-201201:02:27 IST Report Abuse
Courageouscse Cse மிகவும் கஷ்டமாக இருக்கிறது . மனித உயிர் வேலை நாளுக்கு நல குறைகிறதோ என பயமாக இருக்கிறது .மனிதர்கள் நீண்ட நாள் வாழ நாம் நம் பங்கை செய்ய வேண்டும் . வீடு வீட்டு வெளிய போக பயமாக இருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X