சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் ஸ்பார்க் பிளக்கை உருவிசிதம்பரத்தில் 40 ஆயிரம் திருட்டு

Added : பிப் 09, 2012 | கருத்துகள் (1)
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் மேலவீதியில் நூதன முறையில் 40 ஆயிரம் பணத்தைத் திருடி சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அலுவலராக பணியாற்றி வருபவர் வெங்கடாசலம். இவர் நேற்று வங்கியில் இருந்து 40 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மேலவீதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தபோது மர்ம நபர்கள் இருவர் 10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு வெங்கடாசலத்திடம் "உங்கள் பணம் கீழே கிடக்கிறது' என கூறியுள்ளனர். ஆனால் அவர் அந்தப் பணம் என்னுடையது அல்ல என தனது மோட்டார் வாகனத்தை எடுத்துள்ளார்.


தனது பணப்பையை வண்டியில் மாட்டி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து பார்த்தபோது வண்டி ஸ்டாட் ஆகவில்லை. அந்த சமயத்தில் ஒருவன், உங்கள் வண்டியின் "ஸ்பார்க் பிளக்' பிடுங்கிக்கொண்டு கீழே கிடக்கிறது என்றார். அதனை எடுக்க அவர் முயற்சித்த போது வண்டியில் மாட்டியிருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நூதன முறையில் பணத்தை கீழே போட்டு ஏமாற்ற நினைத்ததில் வெங்கடாசலம் ஏமாறாமல் போனாலும் அடுத்த கட்டமாக அவரது வண்டியின் பிளக் பாய்ண்ட்டை பிடுங்கி அந்த வாய்ப்பில் பணத்தைத் திருடர்கள் திருடி சென்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Ramanathan SVG. Okkur - singapore,இந்தியா
10-பிப்-201213:24:30 IST Report Abuse
N.Ramanathan SVG. Okkur எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க அப்படா முடியலடா சாமியோவ் .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X