சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே விபத்து : 4 பேர் பலி

Added : பிப் 13, 2012
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் நிகழ்ந்த விபத்தில் முன்னாள் ஆர்.டி.ஓ உட்பட 4 பேர் பலியாயினர். செங்கல்பட்டிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி, முன்னாள் ஆர்.டி.ஓ. சுப்பிரமணியன் அவரது நண்பருடன் டாடா சுமோ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார், மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் டயர் பஞ்சர் ஆகி நின்றுகொண்டிருந்தது. அப்போது, சென்னையிலிருந்து மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், சுமோ காரின் மீது மோதியது. அதேநேரத்தில், எதிரே வந்த இண்டிகா காருடனும் மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X