சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை தூத்துக்குடியில் மீட்பு

Added : பிப் 17, 2012
Advertisement
நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை தூத்துக்குடியில் மீட்பு

தூத்துக்குடி : நெல்லையில் கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தை, தூத்துக்குடியில் மீட்கப்பட்டது. நெல்லை, பழைய பேட்டையைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரின் மனைவி பிரேமா,19. இவர்கள், நேற்று முன்தினம் சிகிச்சைக்காக, ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, பிரேமா தனது ஒன்றரை மாத ஆண் குழந்தையை, ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு, மாத்திரை வாங்க சென்றுள்ளார்.பிரேமா திரும்பி வந்தபோது, அப்பெண் குழந்தையுடன் மாயமானார். அவர், குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. பிரேமா புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தூத்துக்குடியில் மீட்பு: இந்நிலையில், தூத்துக்குடி, வட்டக்கோவில் முத்து-பாப்பா தம்பதியினர், நேற்று முன்தினம், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றபோது, அவர்களிடம் ஒரு பெண், ஒன்றரை மாத ஆண் குழந்தையை கொடுத்துச் சென்றாராம். அவர்கள், குழந்தையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்த வடபாகம் போலீசார், நேற்று அவர்களை அழைத்து விசாரித்தனர். நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தையாக, அது இருக்குமோ என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று மாலை, பிரேமா, கணவர் அழகுமுத்து, நெல்லையிலிருந்து தூத்துக்குடி வரவழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அது கடத்தப்பட்ட அவர்களது குழந்தை என உறுதியானது. அவர்களுடன் வந்த நெல்லை போலீசாரிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X