அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணுமின் நிலையம் திறப்பதை யாராலும் தடுக்க முடியாது: வாசன்

Added : பிப் 21, 2012 | கருத்துகள் (20)
Share
Advertisement
திருவண்ணாமலை: ""கூடங்குளம் அணு மின் நிலையம் திறப்பதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார். ஆரணியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், இப்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையினால், மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்க உடனடியாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க, மத்திய அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை: ""கூடங்குளம் அணு மின் நிலையம் திறப்பதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.


ஆரணியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், இப்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையினால், மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்க உடனடியாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசும், அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த பகுதி மக்களை சந்தித்து, மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து, அறிஞர்களும், விஞ்ஞானிகளும் விளக்கி வருகின்றனர். ஒத்த கருத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. தனி ஒரு கூட்டத்தினால் தடுக்க முடியாது. நல்ல திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும். தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சீரமைக்க, கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். தற்போதைய, அ.தி.முக., ஆட்சியில் பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மக்களை பாதித்துள்ளது. கடலோர மீனவர்கள், அவ்வப்போது தாக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பாக, பார்லிமென்ட் உறுப்பினர்களும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை சென்று அதிபரை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். இவ்வாறு வாசன் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
janjebe janj - Madras,இந்தியா
22-பிப்-201223:53:45 IST Report Abuse
janjebe janj மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்கிக்கொடுக்க வக்கில்லை. மத்திய அமைச்சரென்று சொல்லி பேச்சு வேறு. 750 வாட்ட் கூடன் குளத்தில் இருந்து கிடைத்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? பற்றாக்குறை 3000 வாட் அல்லவா.
Rate this:
Cancel
Bharathydhasan Kannama - Mumbai,இந்தியா
22-பிப்-201215:15:51 IST Report Abuse
Bharathydhasan Kannama The same story is repeated everyday. This can only happen in India. We have invested rs 16,0000 crore in this project. This project has the best designs in the world. Yet the government is wringing its fingers and thibk that the issue will be solved by talking to protestors. The same protest would have attracted severe punishments in countries like Singapore, China and eben USA. People are being put into constant torture by the announced and unannounced power cuts. The grade 12 exams are schedule to . In most of the private schools grade 09 exams are on. How do we expect our children do do well without a chance to study well at home. The industy is also badly hit. Government of tamilnadu should handle the issue with iron hand and teach a lesson or two to fake activists like Mr. uday kumar. Bharathydhasan
Rate this:
Cancel
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
22-பிப்-201212:57:19 IST Report Abuse
Kumaraswami Balasubramanian எத்தனை நாட்களுக்கு இதே பல்லவியை பாடுவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X