"எண்ணெய் விலையேற்றத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி காரணம்'

Added : பிப் 22, 2012 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அபரிமித பொருளாதார வளர்ச்சி, உலகின் சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் ஆகியவை, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டும், அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பும்,
"எண்ணெய் விலையேற்றத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி காரணம்',India boom led to higher fuel prices: White House

வாஷிங்டன்: இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அபரிமித பொருளாதார வளர்ச்சி, உலகின் சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் ஆகியவை, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டும், அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பும், இப்போது போல எண்ணெய் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு, அமெரிக்காவிற்கு ஒரு விரிவான ஆற்றல் கொள்கை தேவைப்படுவதை உணர்த்துகிறது.இந்தக் கொள்கையைத் தான், அதிபர் ஒபாமா அமல்படுத்தி வருகிறார். இதனால், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வளைகுடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ள எண்ணெய் குத்தகைகளை விற்பதன் மூலம் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளோம்.இவ்வாறு கார்னே தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H.M.Mohamed Niyaz - Satwa,Dubai.,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201219:41:38 IST Report Abuse
H.M.Mohamed Niyaz அப்படி என்ன இந்தியா வளர்ச்சி அடைஞ்சாச்சு. ஒன்னும் பெரிசா தெரியலயே, எது வளருதோ இல்லையோ கரண்டு இல்லாம மக்கள் தொகை வளரும்.
Rate this:
Cancel
PRAVEENKUMAR - chennai,இந்தியா
23-பிப்-201213:09:38 IST Report Abuse
PRAVEENKUMAR இந்த காங்கிரஸ் இல்லையென்றால் இதை விட வேகமாக சென்றிருக்கும்... குடும்ப ஆட்சி, மெகா ஊழல், கிழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரைக்கும் லஞ்சம் .. அன்னை சோனியா மாதிரி அதி மேதவிகள் நாட்டை ஆளாமல் இருந்து இருந்தால் இந்த நாடு என்றோ சீனாவை முந்தி இருக்கும்... அமெரிக்கா பயபடுவதை போல் பாசாங்கு செய்கிறது. அவர்களுக்கு தெரியும் நம்முடைய ஜால்ராக்கள் இந்த ஆட்சியாளர்கள். இவர்கள் ஆளும் வரை இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையாது.... 40 % மக்கள் வறுமை கோட்டுக்கு கிழ்..
Rate this:
Cancel
appu - madurai,இந்தியா
23-பிப்-201209:42:39 IST Report Abuse
appu அமெரிக்காகாரன் இந்தியாவோட பொருளாதார வளர்சிய ஒத்துகிட்டான்...இங்க இருக்க கட்சி செம்புகள் என்ன சொல்றீங்க???உங்க கருத்த தெரிஞ்சிக்க ஆசை...வாங்க சாமிகளோவ்....வந்து அடுக்குங்க...ஜூட்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X