அரும்பொருட்களின் பொக்கிஷம்; சென்னை அரசு அருங்காட்சியகம் -எல்.முருகராஜ்

Added : பிப் 26, 2012
Share
Advertisement
பரபரப்பான சென்னை நகரின் மத்தியில், எழும்பூர் பாந்தியன் சாலை சந்திப்பின் முடிவில் பசுமையும், இயற்கையும், அமைதியும் தவழும் சூழலில் அமைந்துள்ளது சென்னை அரசு அருங்காட்சியகம் எல்லா ஊரிலும் அரசு அருங்காட்சியகம் இருந்தாலும் இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொருட்களும், விஷயங்களும் குவிந்துள்ளது என்பதோடு நவீன காலத்திற்கேற்ப சில காட்சி கூடங்கள் குளுகுளு வசசதியுடன்
அரும்பொருட்களின் பொக்கிஷம்; சென்னை அரசு அருங்காட்சியகம் -எல்.முருகராஜ்

பரபரப்பான சென்னை நகரின் மத்தியில், எழும்பூர் பாந்தியன் சாலை சந்திப்பின் முடிவில் பசுமையும், இயற்கையும், அமைதியும் தவழும் சூழலில் அமைந்துள்ளது சென்னை அரசு அருங்காட்சியகம்

எல்லா ஊரிலும் அரசு அருங்காட்சியகம் இருந்தாலும் இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொருட்களும், விஷயங்களும் குவிந்துள்ளது என்பதோடு நவீன காலத்திற்கேற்ப சில காட்சி கூடங்கள் குளுகுளு வசசதியுடன் பார்வையாளர்களுக்கு களைப்பு ஏற்படாதபடி அமைந்துள்ளது.


புதிய பார்வையாளர்களை மட்டுமின்றி பழைய பார்வையாளர்களையும் கவரும் விதத்தில் வாராவாரம் சிறப்பு பொருட்கள் காட்சி பொருளாக வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் காணிக்கை ஸ்தூபம் காட்சிகூடத்தின் நடுவில் கம்பீரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


இதைப்பற்றி காப்பாட்சியர் ஆர்.பாலசுப்பிரமணியன் கேட்பவர் எளிதில் புரிந்துகொ ள்ளும் வகையில் அருமையாக விளக்குகிறார். கூடுதலாக ஒரு கையேடையும் கொடுத்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கொடுக்கிறார்.


அருங்காட்சியகத்தின் உள்ளேயும், வெளியேயும் காணப்படும் லிங்கோத்பவர், ஜ்யேஷ்டா, தீர்த்தங்கரர், மஹாவீரர், அய்யனார், நீர்தாரை, தட்சிணாமூர்த்தி, சங்கூதும் சிவகணம், யாளி போன்ற நூற்றுக்கணக்காண சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித அழகுடன் காலங்கள் பல கடந்து மிளிர்கிறது.


இவையெல்லாம் பழமையான வரலாற்றை செசால்லும் அற்புதம் என்பதுடன் வேறு எங்கும் காணமுடியாது என்பதால் மாணவியர் குறிப்பெடுத்து படிக்கின்றனர். வெளிநாட்டவர்கள் மணிக்கணக்கில் ரசித்து படங்கள் எடுக்கின்றனர்.


இன்னும் இந்த வளாகத்தினும் பாடம் செசய்துவைக்கப்பட்ட பறவைகள் முதல் பாம்புகள் வரையிலான காட்சி கூடங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு நிறைய விஷயங்களை இந்த அருங்காட்சியகம் கற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.


அனுமதி கட்டணம் சிறுவர்களுக்கு பத்து ரூபாயும், பெரியவர்களுக்கு 15 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை வாரவிடுமுறை நாளாகும். பார்வை நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை.


உங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்தால் ஒரு அரை நாள் செலவாகும், ஆனால் நிச்சயமாக நிறைய சந்தோஷம் கிடைக்கும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X