ஓரின சேர்க்கையில் அந்தர்பல்டி அடிக்கிறது அரசு - நேரத்தை வீணடிக்காதீர்கள் நீதிபதிகள்‌ கோபம்| Don't make mockery of the system and don't waste court's time, SC tells government | Dinamalar

ஓரின சேர்க்கையில் அந்தர்பல்டி அடிக்கிறது அரசு - நேரத்தை வீணடிக்காதீர்கள் நீதிபதிகள்‌ கோபம்

Updated : பிப் 28, 2012 | Added : பிப் 28, 2012 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி: ஓரின சேர்க்கை அனுமதி விவகாரத்தில் மத்திய அரசு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறது. இது குற்றச்செயல் என்றும், கலாச்சாரம் பாதிக்கும் இந்த செயலை அனுமதிக்க முடியாது என்றும் ,கடந்த வாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று திடீரென மத்திய அரசு அந்தர்பல்டி அடித்தது. இது குற்றச்செயல் அல்ல என்று சொல்வதில் தவறு இல்லை
ஒரின சேர்க்கையில் அந்தர்பல்டி அடிக்கிறது அரசு - கோர்ட் நேரத்தை வீணடிக்காதீர்கள் நீதிபதிகள் க�

புதுடில்லி: ஓரின சேர்க்கை அனுமதி விவகாரத்தில் மத்திய அரசு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறது. இது குற்றச்செயல் என்றும், கலாச்சாரம் பாதிக்கும் இந்த செயலை அனுமதிக்க முடியாது என்றும் ,கடந்த வாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று திடீரென மத்திய அரசு அந்தர்பல்டி அடித்தது. இது குற்றச்செயல் அல்ல என்று சொல்வதில் தவறு இல்லை என்றும் , டில்லி கோர்ட் உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் ஓரின சேர்க்கையை அனுமதிக்கலாம் என மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையை கண்டு நீதிபதிகள் கடும் அதிர்ச்சியும், கோபமும் கொண்டனர். அவ்வப்போது நிலையை மாற்றி கோர்ட் நேரத்தை வீணடித்து, கேலிக்குரியதாக்க வேண்டாம் என நீதிபதிகள் கண்டித்தனர். கடந்த 2009ல் ஓரின சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ஒத்திசைவு கொண்ட ஓரினத்தவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டியது அவசியமில்லை என் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பல் வேறு சமூக அமைப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.


கடந்த வாரத்தில் கோர்ட்டில் கூறியது என்ன ?: கடந்த வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்: உலகில் ஏனைய நாடுகளை ஒப்பிடுகையில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் வித்தியாசப்பட்டது. மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரின சேர்க்கையை இந்தியாவில் நாம் அனுமதிக்க முடியாது. ஓரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது. இது சமூக சூழலை கெடுத்து விடும். மேலும் எய்ட்சை பரப்பும் தன்மை கொண்டது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. மேலை நாட்வர்களை நாம் பின்பற்ற முடியாது. நமது நாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு இதனால் இதனை அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் முன்னதாக சுகாதார அமைச்சகம் இந்த கருத்தில முரண்பட்டிருந்தது. இதனால் மத்திய அரசில் குழப்பம் நீடித்தது.

இதனயடுத்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தன் நிலையில் இருந்து மாறியதால் நீதிபதிகள் கோபம் கொண்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X