பதிவு செய்த நாள் :
கருத்துகள் (73)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஹோபார்ட் : இன்றைய முத்தரப்பு போட்டியில் போனஸ் புள்ளியுடன் இந்திய அணி வெற்றி பெற்றதால், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இன்னும் அடுத்த கட்டம் ஆஸியுடன் நடக்கும் போட்டியில் இலங்கை தோற்றால் இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இன்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி , இந்தியாவுக்கு 321 ரன் இலக்கு நிர்ணயித்தது. 40 ஓவருக்குள் 321 ரன்களை எடுத்தால் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், சேவக் மற்றும் சச்சின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இந்திய அணி 37 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கோஹ்லி அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.சச்சின் 102 சதம் அடிப்பார் என்கிறார் கேரள ஜோதிடர் : நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் 100 அல்ல 102 சதம் அடிப்பார் என்றும், ஜோதிட கணக்குப்படி அவரது எதிர்காலம் மிக சிறப்பாக இருப்பதாகவும் கேரள மாநில பிரபல ஜோதிடர் தாமோதரன் கூறியுள்ளார். சச்சின் 100 சதம் அடிப்பாரா , இவர் எப்போது ஓய்வு பெற போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் இந்த

வேளையில் சச்சின் ரசிகர்களுக்கு இந்த ஜோதிடம் சற்று திருப்தியை அளிக்கும் . பிரபல ஜோதிடர் தாமோதரன் கேரள மாநில அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் இவர் முழு நேர ஜோதிடராக மாறினார். இந்நிலையில் இவர் சச்சின் நிலை குறித்து ஆரூடம் கணித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சச்சின்வரவிருக்கும் நாட்களில் பலம் வாய்ந்தவராக இருப்பார். அவர் அவசரப்பட்டு ராஜினாமா முடிவு எதனையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வரவிருக்கும் அவரது பிறந்தநாள் ஏப்., 24 2012 மற்றும் 2013 மிக சிறப்பாக அமையும். இந்நாளில் அவர் மீண்டும் ஆற்றல் பெற்றவராக திகழ்வார். பிறந்த தேதி ராசி தெரியுமா ? இவருக்கு வரும் பிறந்த நாளுடன் 39 வயதை தொடுகிறார். இந்த வயதை கூட்டுகையில் 3 எண் வருகிறது. இந்த 39 என்பது ( 3 + 9 = 12 , 1+2 = 3 ). இந்த

Advertisement

3 ம் எண் இவருக்கு முழு ராசியான எண் ஆகும். இந்த காலம் வரும் போது அவர் 102 சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 102 ஐ பொறுத்தவரை கூட்டினால் 1+0+2 =3 வருகிறது. இவர் பிறந்த தேதியை பொறுத்தவரையில் , ஏப்., 24 , 1973, இந்த எண்களை பொறுத்தவரை 2+4 = 6. இந்த 6ம் எண் அவருக்கு ராசியான எண் ஆகும். இவரது டெஸ்ட் அறிமுகம் கடந்த நவ. 15 , 1989 ல் நிகழ்ந்தது, 15 என்பது 1 +5 = 6 . எனவே வரும் 2 பிறந்த நாள் கொண்டாடி முடிப்பதற்குள் சச்சின் 102 சதம் அடித்து சாதனை நிகழ்த்தி இருப்பார் என்றார் ஜோதிடர் உறுதியாக., !

ஜோதிடர் தாமோதரன் கடந்த தேர்தலின்போது கேரளாவில் உம்ன்சாண்டி முதல்வராக வருவார் , மம்தா. ஜெ., ஆகியோர் கரம் வலுப்பெறும் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக 2011 ல் இந்திய உலக கோப்பை பெறும் என்றும் கணித்து சொல்லியிருந்தார். இவை எல்லாம் பலித்ததது. சமீப காலமாக 2007 முதல் சச்சின் மற்றும் தோனி குறித்து பிளாகுகளில் எழுதி வருகிறார்.
இன்றைய முத்தரப்பு போட்டியில் சச்சின் 30 ரன்கள் ‌எடுத்த நிலையில் அவுட்டானார். கடந்த போட்டியில் 14 ரன் எடுத்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nandhakumar - london ,யுனைடெட் கிங்டம்
03-மார்-201220:22:06 IST Report Abuse
nandhakumar சச்சின் சச்சின்தான் .பொறுமை அவசியம் .
Rate this:
Share this comment
Cancel
velladurai christopher - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-201215:12:00 IST Report Abuse
velladurai christopher சச்சினை விலக சொல்வது தவறு,அவருக்கு விளையாட இன்னும் திறமைகள் இருக்கிறது,அவர் நுறு அடித்தால்,விலக சொல்கிறவர்கள் என்ன செய்வார்கள், எல்லா மாட்சியிலும் நுறு அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
gowtham - oddanchatram,இந்தியா
29-பிப்-201216:45:56 IST Report Abuse
gowtham The sunami named virat destroyed the island Sri lanka
Rate this:
Share this comment
Cancel
ratha krishnan - coibatore,இந்தியா
29-பிப்-201214:11:59 IST Report Abuse
ratha krishnan sachin sadham idikkarudhu anaithu indhiarukkum perumai.
Rate this:
Share this comment
Cancel
Ramkumaran - Chennai,இந்தியா
29-பிப்-201211:33:47 IST Report Abuse
Ramkumaran சச்சின் 99 சதம் அடிக்கும் வரையில் பொறுமையாக இருந்தவர்கள், 100 வது சதத்திற்கு மட்டும் அவசரப்படுகிறார்கள். 99 சதம் அடிக்க 20 வருடங்கள் உழைப்பும், அனுபவமும் தேவைப்பட்டது. நீங்கள் ஊடகங்களில் சச்சினை குறைத்து மதிப்பிட்டு பதிவு செய்து விடுவதுபோல் சதம் என்பது எளிதானது அல்ல. நீங்கள் மார்தட்டிகொல்வதற்காக 100 வது அடிக்க முடியாது. பொறுமையாக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
razzaq - Jubail,சவுதி அரேபியா
29-பிப்-201211:14:07 IST Report Abuse
razzaq ஆமாம் ஆமாம் கண்டிப்பா சதம் அடிப்பாரு ஆனா கொஞ்சம் தாமதம் ஆஹும் எப்படியும் அடுத்த உலக கொபைஎல அடித்து விடுவாரு நம்புக அப்பு .
Rate this:
Share this comment
Cancel
John - karaikudi  ( Posted via: Dinamalar Android App )
29-பிப்-201210:20:22 IST Report Abuse
John சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் அவரை தவறாக விமர்சனம் செய்கிறவர்கள் அவர் ஆட்டத்தை அதி்கம் ரசித்தவர்களே சச்சின் அவரால்தான் கிரிக்கெட் இந்தி்யா வளர்ந்ததை மறுக்க முடியுமா
Rate this:
Share this comment
Cancel
sathis - singapoer  ( Posted via: Dinamalar Android App )
29-பிப்-201208:44:56 IST Report Abuse
sathis மகிழ்ச்சியாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Saravana kumar - coimbatore,இந்தியா
29-பிப்-201207:58:01 IST Report Abuse
Saravana kumar சூப்பர் workout ...
Rate this:
Share this comment
Cancel
Naresh - gummidipoondi  ( Posted via: Dinamalar Android App )
29-பிப்-201206:06:20 IST Report Abuse
Naresh Enna koduma sachin ithu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X