பொது செய்தி

தமிழ்நாடு

1.5 லி., தண்ணீரில் குளிக்கலாம் : மேடையில் "நிரூபித்த' இளைஞர்

Updated : ஜூலை 20, 2010 | Added : ஜூலை 18, 2010 | கருத்துகள் (70)
Share
Advertisement
கோவை:"தண்ணீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, வெறும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் சுத்தமான குளியல் போட்டு காட்டினார், தர்மபுரியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இளைஞர். நூற்றுக்கணக்கானோர் முன், மேடையில் இவர் நிகழ்த்தி காட்டிய குளியல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. "சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும், இன்றும்' என்ற

கோவை:"தண்ணீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, வெறும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் சுத்தமான குளியல் போட்டு காட்டினார், தர்மபுரியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இளைஞர். நூற்றுக்கணக்கானோர் முன், மேடையில் இவர் நிகழ்த்தி காட்டிய குளியல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும், இன்றும்' என்ற தலைப்பிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி, கோவை, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று நடந்தது. தண்ணீரை மையப்படுத்தி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 11.30 மணிக்கு, தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற இளைஞர், ஒன்றரை லிட்டர் தண்ணீரில் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தூய்மையாக குளித்துக் காட்டினார். உள்ளாடையுடன் மேடையில் நின்ற இளைஞர், முதலில் 50 மில்லி தண்ணீரை தலையில் ஊற்றினார். வழிந்தோடிய நீரை வீணாக்காமல் தலை, முகம், கைகளை நனைத்தார். பின்னர், ஷாம்பு, சோப்பு போட்டு குளித்தார். பின், 50 மில்லி தண்ணீரை தலை முதல் கால் வரை அப்படியே வழித்தெடுத்தார். மீண்டும் ஒரு முறை ஷாம்பு போட்டு தலைக்கும், சோப்பு போட்டு உடலையும் கழுவினார்; 100 மில்லி நீரை தலையில் ஊற்றி வழிந்தோட செய்தார்.

தொடர்ந்து, மீண்டும் 100 மில்லி நீரை தலையில் ஊற்றி குளித்தார். முகம் பிரஷ்ஷாக ஆக இரண்டு முறை 100 மில்லி நீரை முகத்தில் ஊற்றினார். இப்படியாக, தனக்கு கொடுக்கப்பட்ட ஒன்றரை லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி சுத்தமாக குளித்துக் காட்டினார். மாணவ, மாணவியர் வியப்போடு பார்த்து, கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் "வெற்றிகரமாக' குளித்து முடித்த கோவிந்தசாமி(26) கூறியதாவது:நான் கிருஷ்ணகிரி மாவட்டம், நாயக்கன்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவன்; ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன். காலை துவங்கி இரவு 7.00 மணி வரை ஆடு மேய்ப்பது வழக்கம். தினமும், 30 கி.மீ., தூரம் வரை சென்று ஆடு மேய்ப்பதால், பல இடங்களுக்கு செல்லவேண்டியிருக்கும். அதனால், கையில் எப்போதும் ஐந்து லி., தண்ணீர் எடுத்துச் செல்வேன். காலை சாப்பாட்டுடன் புறப்படுவேன் . ஆடு மேய்க்கும் இடத்தில் நேரம் கிடைக்கும் போது எடுத்துச் செல்லும் தண்ணீரில் குளித்துக் கொள்வேன்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே இது போன்று குளித்துக் காட்டுகிறேன். எங்கள் மாவட்டத்தில் தண்ணீருக்கு கடும் பஞ்சம்; அதனால் தான் சொல்கிறேன், தண்ணீரை வீணாக்காதீர்கள். ஒரு குடம் தண்ணீருக்கு பல மைல் தூரம் நடந்து சென்றுதான் நாங்கள் எடுத்துவர வேண்டியுள்ளது. இயற்கையை எப்போதும் நாம் பகைத்துக்கொள்ளக்கூடாது. அது நம்மை பகைத்துக்கொண்டால், இவ்வுலகில் வாழ்வது சிரமம்.இவ்வாறு கோவிந்தசாமி தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜய் - chennai,இந்தியா
23-ஜூலை-201010:44:25 IST Report Abuse
விஜய் திரு கோவிந்தசாமியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. நாட்டில் படித்த முட்டாள்கள் அதிகம். முட்டாள்தனமாக படிப்பவர்கள் அதைவிட அதிகம். ஆனால் இந்த பெருமைக்குரிய வாலிபர் நம் எல்லோருக்கும் தான் ஒரு படிக்காத மேதை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். அளவறிந்து வாழ வேண்டும். சிக்கனம் சிறந்த பழக்கம். இயற்கையோடு இயைந்து நாம் வாழவேண்டும். அது மட்டுமே நம்மை காக்கும் என்பன போன்ற பல பல பாடங்களை நமக்கு சொல்லிகொடுக்கும் மகான் இந்த இளைஞர். இவருக்கு இருக்கும் திறமையை அறிவியல் மற்றும் பொறியியல் மேதைகள் ஆதரவு தந்து வளர்த்தால் மேலும் பல அறிய கண்டிபிடுப்புகளை இந்த இளைஞர் செய்யமுடியும் என்றே நான் நினைக்கிறேன். இனி யாரும் பணத்தை தண்ணிமாதிரி செலவழிக்கவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்....
Rate this:
Cancel
டிஜிட்டல் பாலா - kallakurichi,இந்தியா
23-ஜூலை-201000:14:40 IST Report Abuse
டிஜிட்டல்  பாலா ஒரு நல்ல கருத்தை சொல்ல நம்மில் எத்தனை பேர் இப்படி மேடையில் குளிக்க தயார்!?! வாழ்த்துக்கள் கோவிந்தசாமி. ஒரு நாள் இது நிச்சயம் நடக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கே 1 லிட்டர் தண்ணிதான் கிடைக்கும். கண்ணா முழிச்சிகோ .... தண்ணிய சேமிச் சிக்கோ!!
Rate this:
Cancel
K. AZHAHIA NAMBI - Chennai,இந்தியா
22-ஜூலை-201022:33:09 IST Report Abuse
K. AZHAHIA NAMBI I have witnessed the event in Kovai, it takes time to wipe out the shampoo and soap with little water. His bathing was more or less seems to be a massaging the body. Though it is difficult to take bath with 1.5 liters of water, at least we can restrict our bath with single (15 liter) bucket. Kovai public use to take their oil bath with single bucket of water !!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X