அரசியல் செய்தி

தமிழ்நாடு

மசாலா இல்லாத போது அறிக்கை என்ன கேடு? முதல்வர் கோபம்

Updated : ஜூலை 20, 2010 | Added : ஜூலை 18, 2010 | கருத்துகள் (148)
Share
Advertisement
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி, அடுக்கடுக்காக பதிலளித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:விலைவாசி உயர்வு பற்றி, ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு நீண்ட விளக்கத்தை நான் அளித்த பின்னும், கருணாநிதி வாய் திறக்கவில்லை; ஆகவே நான் கூறியது உண்மையாகி விட்டது என்றெல்லாம் அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.தமிழகம்

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி, அடுக்கடுக்காக பதிலளித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:விலைவாசி உயர்வு பற்றி, ஜெயலலிதா கோவையில் பேசியதற்கு நீண்ட விளக்கத்தை நான் அளித்த பின்னும், கருணாநிதி வாய் திறக்கவில்லை; ஆகவே நான் கூறியது உண்மையாகி விட்டது என்றெல்லாம் அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார்.தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்பதற்கு உதாரணமாக பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருகியிருப்பதை மட்டுமே நான் எடுத்துக் காட்டிடாமல், எந்த அளவிற்கு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பெருகியிருக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். புதிய கல்லூரிகள், பள்ளிகள், மாவட்டங்கள் ஏற்படுத்துவதெல்லாம் சாதனை அல்ல என்று சொல்கிறார் ஜெயலலிதா. அவரது ஆட்சியில் அவர் இவ்வாறு துவங்கியிருந்தால், அதைப் புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டு, தி.மு.க., ஆட்சியை விட, அ.தி.மு.க., ஆட்சியில் அதிகமாகச் செய்தோம் என்று சொல்வதற்கு அவர்களிடம் மசாலா இல்லாத போது அறிக்கை என்ன கேடு?

தனது கோவை உரையில், தி.மு.க., ஆட்சியில் அரிசி பதுக்கல், கடத்தல் என்றெல்லாம் முழங்கியிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் பதுக்கல்காரர்கள் மீதும், கடத்தல்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சியில், 58 ஆயிரத்து 807 வழக்குகளும், 13 ஆயிரத்து 311 கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.ஆன்-லைன் வர்த்தகம் பேசியுள்ள ஜெயலலிதா, அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை விற்பனை செய்வதாகவும், அந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு பல காரணங்கள் ண்டு என்றும் பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பொருள்களுமே ஆன்-லைன் வர்த்தகம் மூலம் தற்போது விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.காலாவதி மருந்த பற்றியும் ஜெயலலிதா கோவையில் பேசியிருக்கிறார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில இருந்த காலத்திலிருந்து, காலாவதியான மருந்துகளின் முகப்புச் சீட்டுகளை மாற்றி, மீண்டும் விற்பனைக்கு அனுப்பும் செயலில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை, தி.மு.க., அரசு தான் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 40 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 19 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஸ்டாலின் மருமகன் பற்றி அவர் கூறிய குற்றச்சாட்டிற்கு நான் பதில் அளிக்கவில்லையாம். அதனால் அதை நான் ஒப்புக் கொண்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா.

அதற்குள் அவசரப்படுகிறார். ஸ்டாலின் மருமகன் மீது ஜெயலலிதா கூறிய புகாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மின்சாரப் பிரச்னை குறித்தும் நான் பதில் சொல்லவில்லை என்கிறார் ஜெயலலிதா. தி.மு.க., ஆட்சியிலே புதிதாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தியதன் விளைவாக தொழில் வளம் பெருகி, மின்சாரத் தேவை அதிகமாகியுள்ளதால், அந்தப் பற்றாக்குறையையும் ஈடுகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.மணல் கொள்ளை பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.

அவரது ஆட்சியில் தான் தமிழக அரசே மணல் குவாரிகளை எடுத்து நடத்தும் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தினர். அதே நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. மணல் வியாபாரம் மூலம் தன் ஆட்சியில், ஆறுமுகசாமிகள் கப்பம் கட்டியதை மறந்து விட்டு ஆதாரம் எதுவுமில்லாமல் தற்போது அப்படி நடக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் கோவையில் பேசியிருக்கிறார்.திருட்டு ரயில் வந்தவர் என்று தன்னைப் பற்றிதானே கூறிக்கொண்ட ஒரு மனிதர், அரசியல் மூலம் இவ்வளவையும் சம்பாதித்து இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். திருட்டு ரயில் ஏறி வந்தவன் நான் என்று எப்போதும் கூறிக் கொண்டதில்லை.ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். கோவை, சேலத்தில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சம்பாதித்து அதன் பின் தான் சென்னை வந்தேன். நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள், நூல்கள் வாயிலாக  சம்பாதித்தேன். அவற்றிலிருந்து பொது நலன்களுக்காக நிதியும் வழங்கி வருகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (148)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலாஜி - tirupur,இந்தியா
31-ஜூலை-201010:45:07 IST Report Abuse
பாலாஜி aiyaya voda sottha kanakku pakkum pothu amma vodaq sothu kammi than ketta ellame kanakula irukunu solvanga ana ivanga family ku ithuku enga irunthu muthalidu vanthuchunu keetta eluthi sambathichennu solrar. avaral avanga kudumba sothu kanakka velivida mudiuma appa makkale keppanga ! amma um oru olungana yethir katchi thalaivara nadanthukala ...
Rate this:
Cancel
மு.vijayakumar - tirupur,இந்தியா
23-ஜூலை-201019:50:03 IST Report Abuse
மு.vijayakumar செல்வி ஜெயலலிதா ஆட்சியில் இப்போ இருந்தாலும் விலைவாசியை ஒன்றும் செய்ய முடியாது.நக்கீரன் கோபால் தம்பிங்க மேல கேஸ் போட்டப்பவே,மக்களிடம் அம்மாவுக்கு செல்வாக்கு போச்சி.இனிமே என்ன அறிக்கை விட்டாலும் அம்மா, வின் பண்ண முடியாது.தேர்தல் முடிந்து கொடநாடு போயி ரெஸ்ட் எடுங்க தாயே.
Rate this:
Cancel
உணர்ச்சி - Chennai,இந்தியா
21-ஜூலை-201019:56:19 IST Report Abuse
உணர்ச்சி அய்யா, திருவாரூர் சீமந்தனுக்கு ஏன் இந்த கோபம்?எழுதி சம்பாரிதீர்களா? சொத்து விவரங்களை எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளியிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி,சேலம் மாவட்ட கலெக்டர் போன்றவர்களுக்கு மத்தியில் இப்படி மனசாட்சியே இல்லாமல் பேசும் மானுடனும் இருக்கிறான் இவ்வையகத்தில்! அது சரி. உயில் எழுதி விட்டீகளா? தென் தமிழ்நாடு அழ கிரிக்கு ,வடக்கு ஸ்டாலின் கு, டெல்லி கனிமொழி,ராசா கு என்று..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X