தானே புயல் நிவாரண நிதிக்காக ஒவியர்கள் வரைந்த காவியங்கள்- எல்.முருகராஜ்

Added : மார் 10, 2012
Share
Advertisement
கணக்கெடுத்தவரை735 கிராமங்கள்1000 ஹெக்டர் பலாமரங்கள்22,500 ஹெக்டர் மூங்கில் காடுகள்58,000 ஹெக்டர் நெற்பயிர்கள்2,00,000 லட்சம் வீடுகள்30,00,000 மக்கள் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டுள்ள நம் மக்களுக்கு அன்பும், ஆதரவும் மட்டுமல்ல நிவாரணமும், நிம்மதியும் தரவேண்டிய தார்மிக கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தானே புயலானது சுனாமியை விடக்கொடுமையானது என்ற போதிலும் அது
தானே புயல் நிவாரண நிதிக்காக ஒவியர்கள் வரைந்த காவியங்கள்- எல்.முருகராஜ்

கணக்கெடுத்தவரை
735 கிராமங்கள்
1000 ஹெக்டர் பலாமரங்கள்
22,500 ஹெக்டர் மூங்கில் காடுகள்
58,000 ஹெக்டர் நெற்பயிர்கள்
2,00,000 லட்சம் வீடுகள்
30,00,000 மக்கள் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்


பாதிக்கப்பட்டுள்ள நம் மக்களுக்கு அன்பும், ஆதரவும் மட்டுமல்ல நிவாரணமும், நிம்மதியும் தரவேண்டிய தார்மிக கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தானே புயலானது சுனாமியை விடக்கொடுமையானது என்ற போதிலும் அது மக்களிடம் பெரியதொரு தாக்கத்தை, துக்கத்தையோ ஏற்படுத்தாதற்கு காரணம் உயிர்பலி இல்லாததால் இருக்கலாம். உயிர் இருந்தால் போதும் எழுந்துவிடலாம் என்பது ஒரு நம்பிக்கையான வார்த்தை ஆனால் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைய தேதிக்கு உயிர் மட்டுமே இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டிய அவசர, அவசியத்தில் நாம் இருக்கிறோம்.


இதற்காக பல தளங்களில் களம் இறங்கியுள்ள விகடன் குழுமம், புகழ் பெற்ற ஒவியர்களின் ஒவிய கண்காட்சி நடத்தி, கண்காட்சியில் விற்கப்படும் ஒவியத்திற்கான விலையை சேகரித்து தானே புயல் நிவாரண நிதியாக வழங்க உள்ள களமும் ஒன்றாகும்.


இதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகடமியில் புகழ்பெற்ற 275 ஒவியர்களின் 335 ஒவியங்களை கண்காட்சிக்கு வைத்திருந்தது. ஒவ்வொரு ஒவியமும், உயிர் துடிப்போடு ஒவியரின் பெருமையை பறைசசாற்றியது. அதிலும் தங்களது படைப்பு ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு செல்கிறது என்பதை உணர்ந்து ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன், படைத்துள்ளதை ஒவியங்களை பார்க்கும்போதே உணரமுடிந்தது. பல வண்ணங்களில் பல விதங்களில் வரையப்பட்டிருந்த இந்த ஒவியங்களை இலவசமாக வழங்கிய ஒவியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X