பொது செய்தி

இந்தியா

வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்குதாதாசாகிப் பால்கே விருது

Added : மார் 22, 2012
Share
Advertisement
புதுடில்லி:வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது.பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித்ரே, கடந்த 1959ம் ஆண்டு இயக்கி, வெளியான "அபூர் சன்சார்' என்ற சினிமா மூலம், திரையுலகிற்குள் நுழைந்தவர் சௌமித்ரா சட்டர்ஜி,77. சத்யஜித்ரே இயக்கிய 14 சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து, அவரது ஆஸ்தான "ஹீரோ' என்று
வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்குதாதாசாகிப் பால்கே விருது

புதுடில்லி:வங்காள நடிகர் சௌமித்ரா சட்டர்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது.பிரபல சினிமா இயக்குனர் சத்யஜித்ரே, கடந்த 1959ம் ஆண்டு இயக்கி, வெளியான "அபூர் சன்சார்' என்ற சினிமா மூலம், திரையுலகிற்குள் நுழைந்தவர் சௌமித்ரா சட்டர்ஜி,77. சத்யஜித்ரே இயக்கிய 14 சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து, அவரது ஆஸ்தான "ஹீரோ' என்று அழைக்கப்பட்டார். தவிர, தேவி, சாருலதா, காரேபைரி போன்ற படங்களிலும் நடித்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.சத்யஜித்ரே மட்டுமின்றி, தபன் சின்கா, மிரினல் சென் போன்ற மற்ற பிரபல வங்கமொழி இயக்குனர்கள் இயக்கிய சினிமாக்களிலும், இவர் நடித்துள்ளார்.


இந்நிலையில், திரையுலகில் முத்திரை பதித்த சட்டர்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதான, தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சௌமித்ரா சட்டர்ஜி கூறுகையில், "எனது நடிப்பிற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் தான் இந்த விருது' என்றார். கடந்த 2004ல், இவர் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X