கே.கே.நகர்: வங்கி ஏ.டி.எம்., மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பணம் வழங்கும் இயந்திரம் எரிந்து நாசமானது.öŒன்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் உள்ளது பஞ்சாப் தேசிய வங்கயின் ஏ.டி.எம்., மையம். இங்கு பணம் வழங்கும் இயந்திரம் மற்றும் "ஏசி' ஆகியவை மின்வெட்டின் போதும் இயங்கும் வகையில் யு.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பேட்டரியில், நேற்று காலை மின்கசிவு ஏற்பட்டுள்ளது.சில நிமிடங்களிலே இந்த மின்கசிவு பெரியளவில் பரவி, ஏ.டி.எம்., மையத்தில் தீ பரவியது. அப்போது ஏ.டி.எம்., மைய பாதுகாவலர் கரூர் கந்தசாமி, மையத்தினுள் வைக்கப்பட்டிருந்த தீயணைக்கும் கருவியை இயக்க முயன்றுள்ளார். அதற்குள் தீ மளமளவென பரவவே, மையத்தை விட்டு வெளியேறி தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.அசோக்நகர் தீயணைப்பு படையினர், 20 நிமிடத்திற்குள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏ.டி.எம்., இயந்திரம், யு.பி.எஸ்., பேட்டரிகள் என ஐந்து லட்சம் ரூபா# மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இருப்பினும், தீயணைப்புத் துறையினர் விரைந்து செய்ல்பட்டதால், ஏ.டி.எம்., இயந்திரத்தின் மேல் பகுதி மட்டும் சேதமடைந்தது.இயந்திரம் தீயால் சேதமடைந்ததால், அதைத் திறந்து பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக இயந்திரத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பணம் தீயால் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை அறிய முடியவில்லை. இந்த சூழ்நிலையில், இயந்திரத்தைத் திறக்க இன்ஜினியர்களை அழைத்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE