சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா வன பகுதிக்கு அணி வகுத்த யானைகள் : தமிழக எல்லையில் அறுவடை முடிந்ததால் இடம் பெயர்வு

Added : மார் 23, 2012
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், ஐந்து மாதமாக முகாமிட்டிருந்த கர்நாடக யானைகள், நேற்று ஒன்றன் பின் ஒன்றாக, அம்மாநில வனப்பகுதிக்கு அணி வகுத்து சென்றன.கர்நாடக மாநிலம், பன்னார் கட்டாவில் இருந்து, அக்டோபர் மாதம், 375 யானைகள், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் புகுந்தன. இந்த யானைகள், ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், உரிகம், சூளகிரி மற்றும்
 கர்நாடகா வன பகுதிக்கு அணி வகுத்த யானைகள் : தமிழக எல்லையில் அறுவடை முடிந்ததால் இடம் பெயர்வு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், ஐந்து மாதமாக முகாமிட்டிருந்த கர்நாடக யானைகள், நேற்று ஒன்றன் பின் ஒன்றாக, அம்மாநில வனப்பகுதிக்கு அணி வகுத்து சென்றன.கர்நாடக மாநிலம், பன்னார் கட்டாவில் இருந்து, அக்டோபர் மாதம், 375 யானைகள், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் புகுந்தன. இந்த யானைகள், ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், உரிகம், சூளகிரி மற்றும் உத்தனப்பள்ளி சுற்றுவட்டார மலைக் கிராமங்களில், கடந்த ஐந்து மாதமாக புகுந்து, விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின.விவசாய தோட்டத்தில், காவலுக்கு இருந்த, 11 விவசாயிகளை, யானைகள் மிதித்து கொன்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவை பொறுத்தவரையில், ஐந்து மாதமாக, ராகி, காய்கறிகள் மற்றும் பல்வேறு விவசாய பயிர்கள் அறுவடை, முழு வீச்சில் நடந்தது.வனத்துறையினர் விரட்டியும், இந்த யானைகள், கர்நாடகாவுக்கு செல்லாமல் முரண்டு பிடித்து, தொடர்ந்து, தமிழக வனப்பகுதியை சுற்றி வந்தன. தற்போது, அறுவடை பணிகள் முற்றிலும் முடிந்த நிலையில், ஓசூர் வனப்பகுதியில், யானைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதனால், கர்நாடக யானைகளை, தமிழக வனத் துறையினர், படிப்படியாக, தமிழக வனப்பகுதியை விட்டு அம்மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் முதற்கட்டமாக, சானமாவு பகுதியில் இருந்து, 65 யானைகள் கர்நாடக வனப்பகுதியில் சென்றனர்.நேற்று இரண்டாவது கட்டமாக, கர்நாடகாவை சேர்ந்த, 55 யானைகளை, மாவட்ட வன அலுவலர் உலகநாதன், உதவி வன அலுவலர் பத்மா தலைமையில் வனத்துறையினர், ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து நொகனூர், ஜவளகிரி, தளி காப்பு காடுகள் வழியாக கர்நாடகா வனப்பகுதியில் விரட்டினர்.யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை சாலைகளை கடந்து, ஒன்றன்பின் ஒன்றாக மலைக்கிராமங்களை கடந்து சென்றதை, பொதுமக்களும், வயல்வெளிகளில் வேலைபார்த்த விவசாயிகளும், வேடிக்கை பார்த்தனர்.மீதமுள்ள, 300க்கும் மேற்பட்ட கர்நாடக யானைகளை, இன்னும் இரு வாரத்தில், கர்நாடகாவுக்கு விரட்டியடிக்க, வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.மாவட்ட வன அலுவலர் உலகநாதன் கூறியதாவது:நடப்பாண்டு கர்நாடகாவில் இருந்து மொத்தம், 375 யானைகள் வரை ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. தற்போது பெங்களூரு வனப்பகுதி மற்றும் கிராம பகுதியில் செழிப்பு மிகுந்து, பல்வேறு விவசாய சாகுபடி மற்றும் அறுவடை பணிகள் நடக்கின்றன.அதனால், தமிழகத்தில் புகுந்த கர்நாடக யானைகள், கர்நாடகா வனப்பகுதிக்கு செல்ல துவங்கியுள்ளன.இவ்வாறு உலகநாதன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X