இந்திய வியாபாரிகள் சீனாவில் உண்ணாவிரதம்

Updated : மார் 29, 2012 | Added : மார் 29, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இரு இந்தியர்கள், கோர்ட் உத்தரவினால் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப சீனா அரசு அனுமதியளிக்காததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் இரு இந்தியர்கள் வியாபாரம் தொடர்பாக 1.5 மில்லியன் டாலர் கடன் வாங்கியதில், திரும்பி செலுத்தாததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

பீஜிங்: சீனாவில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இரு இந்தியர்கள், கோர்ட் உத்தரவினால் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப சீனா அரசு அனுமதியளிக்காததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் இரு இந்தியர்கள் வியாபாரம் தொடர்பாக 1.5 மில்லியன் டாலர் கடன் வாங்கியதில், திரும்பி செலுத்தாததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் இருந்தனர். பின்னர் இது தொடர்பாக கோர்டில் நடந்த விசாரணையில் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் வழக்கு விசாரணைக்காக ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். எனினும் அதற்கான செலவு தொகை ஏற்கனவே இந்திய அரசு அளித்து வந்தது. தற்போது நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் நாடு (இந்தியா) திரும்ப முயற்சி செய்தனர். இதற்கு ஷாங்காய் அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தங்களை நாடு திரும்ப அனுமதிக்காவிட்டால் தற்‌கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamaludin - Guanzhou,சீனா
29-மார்-201212:02:14 IST Report Abuse
Kamaludin இவர்கள் இந்திய வியாபாரிகள் என்ற போர்வையில் உள்ள ஏமாற்று பேர்வழிகள். இந்தியர்களுக்கு உள்ள மரியாதையை கெடுப்பதுடன் இந்தியார்கள் எல்லோரையும் திருடர்களாக சித்தரிக்கும் செயல். தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல் விரும்பத்தக்கதல்ல. இந்த மாதிரி நம்பிக்கை துரோகிகளுக்கு தான் இந்த அரசாங்கம் துணை போகிறதா? இந்திய வியாபாரிகளுக்கு இந்தியாவில் உள்ளதை விட சீனாவில் நல்ல மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. வாசகர்களும், பத்திரிக்கைகளும் நேர்மையான கண்ணோட்டத்தில் அணுகவேண்டும். Dr Kamaludin
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X