பீஜிங்: சீனாவில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இரு இந்தியர்கள், கோர்ட் உத்தரவினால் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப சீனா அரசு அனுமதியளிக்காததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் இரு இந்தியர்கள் வியாபாரம் தொடர்பாக 1.5 மில்லியன் டாலர் கடன் வாங்கியதில், திரும்பி செலுத்தாததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் இருந்தனர். பின்னர் இது தொடர்பாக கோர்டில் நடந்த விசாரணையில் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் வழக்கு விசாரணைக்காக ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். எனினும் அதற்கான செலவு தொகை ஏற்கனவே இந்திய அரசு அளித்து வந்தது. தற்போது நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் நாடு (இந்தியா) திரும்ப முயற்சி செய்தனர். இதற்கு ஷாங்காய் அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தங்களை நாடு திரும்ப அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE