காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு ரூ.16 லட்சம் சொத்துவரி விதிப்பு| Corporation slaps Rs. 16-lakh tax bill on Sabarmati Ashram | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு ரூ.16 லட்சம் சொத்துவரி விதிப்பு

Updated : ஏப் 07, 2012 | Added : ஏப் 07, 2012 | கருத்துகள் (2)
Share
ஆமதாபாத்: குஜராத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் , ரூ. 16 லட்சம் சொத்துவரியினை அபராதத்துடன் பாக்கியி்ன்றி செலுத்த வேண்டும் என மாநகராட்சி திடீர் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆற்றக்கரையில், காந்தியின் ஆசிரமம் உள்ளது. கடந்த 1917-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி கடந்த 1918-ம் ஆண்டு முதல் 1930 வரை தங்கியிருந்து , தேசத்தின் விடுதலைக்காக

ஆமதாபாத்: குஜராத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் , ரூ. 16 லட்சம் சொத்துவரியினை அபராதத்துடன் பாக்கியி்ன்றி செலுத்த வேண்டும் என மாநகராட்சி திடீர் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆற்றக்கரையில், காந்தியின் ஆசிரமம் உள்ளது. கடந்த 1917-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி கடந்த 1918-ம் ஆண்டு முதல் 1930 வரை தங்கியிருந்து , தேசத்தின் விடுதலைக்காக பல்வேறு அறப்போரட்டங்களை பிரி்ட்டிஷ் அரசுக்கெதிராக நடத்தினார்.
இந்த ஆசிரம வளாகத்தில், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ,ஹாஸ்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டடங்கள் என 12 வகையான சொத்துக்கள் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீசில் ரூ. 16 லட்சம் சொத்துவரி பாக்கி உள்ளதாகவும் அதனை உடன‌ே பாக்கியின்றி செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மீறினால் ஆசிரமம் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆசிரமத்திற்கு கடந்த 1960ம் ஆண்டு குஜராத்-மகாராஷ்டிரா என மாநிலங்கள் பிரிக்கப்படாத போது, அப்போதைய மும்பை மாகாண முதல்வராக இருந்த மொரார்ஜிதேசாய், காந்தியின் ஆசிரமத்தின் மீதான சொத்துவரியினை முழுமையாக ரத்து செய்தார். அதே போன்று அப்போதைய ஆமதாபாத் நகராட்சி தலைவராக இருந்த முன்னாள் துணைப்பிரதமர் வல்லபாய்பட்டேல் ,ஆசிரமத்திற்கு நிரந்தர வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டார்.
எனினும் கடந்த 1987-ம் ஆண்டு இந்த ஆசிரமத்திற்கு காங்கிரஸ் ஆட்சியின் போது முதன்முதலாக சொத்துவரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து 2000-ம் ஆண்டு வரை சொத்துவரி செலுத்தப்பட்டதாகவும்,பி்ன்னர் அத்தொகை அரசியல் தலைவர்களுக்கான சிறப்பு சலுகையின் கீழ் திருப்பி கொடுக்கப்பட்டதாகவும கூறப்படுகிறது.
இது குறித்து சபர்மதி ஆசிரம டிரஸ்ட் நிர்வாகி அஜித் ஜாவத் கூறுகையில், இந்த ஆசிரமத்தில் நடத்தப்படும் பள்ளி , கல்லூரிகள் வர்த்தக நோக்கில் இயக்கப்படவில்லை. ஆசிரியர்கள்,ஊழியர்களுக்கான சம்பளத்தினை அரசிடமிருந்தும், மகாத்மாவின் ஆதரவாளர்கள் வழங்கி வரும் நன்கொடையினை வைத்து தான் நிர்வாகச்செலவுகளை செய்து வருகிறோம். நிரந்தர வரிவிலக்கு குறித்து ஒவ்வொரு முறையும் மாநகராட்சிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி வந்துள்ளோம்.கடந்த 2007-ம் ஆண்டு எங்களின் ஆசிரமத்திற்கு வரிபாக்கி நிலுவையில்இருப்பதாக நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு விளக்கம் அளித்தோம். பின்னர் அடுத்த ஆண்டிலும் (2008ம்) நேட்டீஸ் அனுப்பினர், இப்படி வருடந்தோறும் நோட்டீஸ் அனுப்பி செத்துவரி பாக்கி கூறுகின்றனர். இது தொடர்பாக வரிவிலக்கு அளிக்குமாறு மாநகராட்சி மேயர் ஆசித்வோராவிற்கு கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி கடிதம் அனுப்பி‌னோம் ,இதுவரை எந்த பதிலும் இல்லை என்றார்.
இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லையெனில் முதல்வர் நரேந்திரமோடி, கவர்னர் கமலாபெனிவால் ஆகியோர‌ை சந்தித்து முறையிடப்போவதாகவும் ஆசிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X