டமாஸ்கஸ்:சிரியா நாட்டில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையை எதிர்த்து, கடந்த ஓராண்டாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராணுவம், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, அரபு நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து, ஐ.நா., அமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், தூதராகச் சென்று, சிரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சு வார்த்தையில், போராட்டக்காரர்கள் அதிகம் நிறைந்த நகரங்களை விட்டு, வரும் செவ்வாய்க் கிழமைக்குள் ராணுவத்தினர் வெளியேற வேண்டும். வரும் வியாழக் கிழமைக்குள் அரசு தரப்பினரும், அரசுக்கு எதிரானவர்களை ஆயுத தாக்குதலை கைவிட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. இதை சிரியா அதிபரும் ஏற்றுக் கொண்டார்.ஆனாலும், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறையும், ராணுவத்தினரின் தாக்குதலும் அதிரித்துள்ளது. போராட்டக்காரர்கள் பிடியில் உள்ள நகரங்களில் நேற்று ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில், 80 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில், 52 க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE