பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் விஷு கனி தரிசனம்:அதிகாலையில் அலை மோதிய பக்தர்கள்

Added : ஏப் 14, 2012
Share
Advertisement
சபரிமலை:சபரிமலையில் விஷு கனி தரிசனத்துக்காக நேற்று அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.சித்திரை மாதம் மலையாளத்தில் "மேடம்' என அழைக்கப்படுகிறது. "மேடம்' 1 ம் தேதி விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்தில் வெள்ளியன்றும், கேரளாவில் சனியன்றும் வந்தது. இதையொட்டி, கேரளாவில் நேற்று விஷு கனி கொண்டாடப்பட்டது.

சபரிமலை:சபரிமலையில் விஷு கனி தரிசனத்துக்காக நேற்று அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.சித்திரை மாதம் மலையாளத்தில் "மேடம்' என அழைக்கப்படுகிறது. "மேடம்' 1 ம் தேதி விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்தில் வெள்ளியன்றும், கேரளாவில் சனியன்றும் வந்தது. இதையொட்டி, கேரளாவில் நேற்று விஷு கனி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சபரிமலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீகோவிலுக்குள் காய், கனிகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை கைநீட்டம் வழங்கினார்.


அதிகாலையில் நடை திறந்த போது 18ம் படியேறி பகவானை தரிசிக்க நீண்ட கியூ காணப்பட்டது. தொடர்ந்து நெய்யபிஷேகமும், இதர பூஜைகளும் நடைபெற்றன. இதேபோல, குருவாயூர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று விஷு பண்டிகை கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த பிறகும், பல முக்கிய கோவில்களில், கேரள ஆச்சார முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் ஒன்று, சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோவில். அங்கு நேற்று அதிகாலையில் பலவகை காய், கனிகளால் அமைக்கப்பட்டிருந்த கனி காணும் நிகழ்ச்சி, பக்தர்களை மிகவும் கவர்ந்தது. கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X